வெள்ளி, 18 ஜூலை, 2025

 உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

 படம் : இதய கமலம்

பாடல்: உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
குரல்: சுசீலா
வரிகள்: கண்ணதாசன்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...