உலகின் முதல்மொழி தமிழ்; ஆதாரங்களுடன் ‘டாப் 10’ வரிசையில் பழமையான சில மொழிகள்
ஆதாரப்பூர்வமான ஆய்வுகளின் மூலமாக மிகத்தொன்மையான பத்து மொழிகளை தேர்வு செய்து, வரிசைப்படுத்தியுள்ளனர்.
உலகத்தின் முதல் மொழியாக தமிழ் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இப்படி மேலும் சில மொழிகளையும் ’டாப் 10’ வரிசையில் வெளியிட்டுள்ளனர்.
இப்போது உலகில் 6000 மொழிகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழிகள் பல இருக்கின்றன.
எது பழமையான மொழி என தீர்மானிப்பதில் சூடான விவாதங்களும் அடங்கியுள்ளன.
ஆனாலும், இந்த கடினமான முயற்சிக்கும் பல்வேறு தரப்பு ஆய்வாளர்களின் அங்கீகரிப்புடன் ஒரு சரியான தீர்வு கிடைத்துள்ளது.
முதல் 10 மொழிகளின் வரிசை
10- லத்தீன்
கி.மு.75 க்கு முன்பிலிருந்து லத்தீன் இருந்துள்ளது. இத்தாலியில் ரோமப் பேரரசுகளின் முதன்மை மொழியாக இருந்து, பல போர்களையும் வெற்றிகளையும் தன் வரலாற்றில் ஏந்தி நிற்கிறது.
இப்போது உள்ள பல ரோமானிய மொழிகள் லத்தீனிலிருந்தே தோன்றியுள்ளன. ஆங்கிலம் உட்பட பல நவீன மொழிகளில் லத்தீன் சொற்கள் அதிகம் காணப்படுகின்றன. இப்போதும், லத்தீனில் உயர்கல்வி படிப்புகள் ஒரு அனுபவிப்பாக கற்றுத்தரப்படுகிறது.
9- ஆர்மேனியன்
இது இந்தோ- யூரோப்பியன் மொழி. இதற்கு பழமையான இலக்கண வரலாறு உண்டு. 5 ம் நூற்றாண்டில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட பைபில் குறிப்புகள் இந்த மொழியின் பழமைக்கு சான்று. இது சுமார் கி.மு. 450 களிலே தோன்றியுள்ளது. இப்போதும் இதை தாய்மொழியாக கொண்ட மக்கள் 50 லட்சம் பேர் உள்ளனர்.
8- கொரியன்
கி.மு. 600 ம் நூற்றாண்டு பழமையுடையது. கொரியன் தீபகற்பத்தில் 6.5 கோடி மக்களும் மற்ற நாடுகளில் 55 லட்சம் மக்களும் தாய்மொழியாக கொண்டுள்ளனர்.
கொரியாவின் வலிமையான தேசிய அடையாளமாகவும் மக்களால் பேசவும் எழுதவும் பயன்படும் முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.
7 - ஹீப்ரு
கி.மு.1000 ம் நூற்றாண்டுகளில் தோன்றியது. இஸ்ரேலின் தேசிய மொழியான இது. பல காலமாக புனித நூல்கள், புனித வாசகங்கள் எழுதும் மொழியாக மட்டுமே பயன்பட்டு வந்துள்ளது. அதனால் ’பரிசுத்த மொழி’ என பெயர் பெற்றது. தற்சமயம், யூதர்களுக்கு பேசவும் எழுதவும் அவர்களை ஒருங்கிணைக்கவும் பயன்படுகிறது.
6- அராமைக்
இநத மொழி கி.மு.1000 ம் ஆண்டு பழமையுடையது என்றும் ஹீப்ரு, அரபு போன்ற மொழிகளே அராமைக்கிலிருந்து மருவி உருவாயின, அந்த மொழிகளின் பெரும்பாலான வேர்ச்சொற்கள் அராமைக் மொழிக்குரியது.
ஈராக், ஈரான், சிரியா, இஸ்ரேல், லெபனான் மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் பல்வேறு மொழிகளுக்கு தாய்மொழியாக இருப்பதோடு, ரஷ்யா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர்கள் பலருக்கும் இது தாய்மொழியாக திகழ்கிறது.
5- சைனீஸ்
சைனீஸ் மொழிக்கு கிடைத்துள்ள எழுத்து ஆதாரம், 3000 ஆண்டுகளில் இருந்து கி.மு.1200 ஆண்டுகளுக்குரியது. 1.2 பில்லியன் மக்கள் சைனீஸை முதன்மை மொழியாக பேசுகிறார்கள். இதுவே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாக உள்ளது.
4- கிரேக்கம்
இந்த மொழியின் பழமையான எழுத்துப் பதிவு கி.மு.1450 ஆண்டுகளுக்கு உரியது. இது ஐரோப்பியர்களின் நீண்ட, வலிமையான வரலாற்றுக்குரிய மிகப்பழமையான மொழி, இதன் மருவிய மொழிகளான க்ரீஸ், அல்பனா மற்றும் சிப்ரஸ் உட்பட இந்த மொழி பேசும் மக்கள் ஒரு கோடியே 30 லட்சம்.
3- எகிப்தியன்
இது எகிப்தின் பழமையான மொழி, இது அஃரோ- ஆசியாடிக் மொழி குடும்பத்தை சேர்ந்தது. அங்குள்ள கல்லறை சுவரில் கி.மு.2600- கி.மு.2000 காலத்திற்குரிய ஒரு மூதாதையரின் சுயசரிதை குறிப்பு உள்ளது.
2- சமஸ்கிருதம்
தமிழிலிருந்து உருவான சமஸ்கிருதம் பல ஐரோப்பிய மொழிகளுக்கு வளமை சேர்த்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமஸ்கிருதம் இந்தியாவின் பாரம்பரிய மொழியாக விளங்குகிறது. கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி இந்தியாவின் அலுவலக மொழியாக இருந்தாலும் இதன் தாய்மொழிக்கான அங்கீகாரம் மிககுறைவானது.
1- தமிழ்
தமிழ் மொழி 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மொழி இதன் இலக்கணம் மற்றும் மொழிவளம் சிறந்தது விரிவானது. 14 வருடங்களுக்கு முன்பு எடுத்த சர்வேயின் படி 1,863 பத்திரிகைகள் தமிழில் நடத்தப்படுவதே அதன் நிகழ்கால வளத்துக்கும் சான்று.
தமிழ் தோன்றிய காலத்தில் வேறுசில மொழிகளும் தோன்றியிருக்கலாம். பிறகு, அழிந்தும் இருக்கலாம்.
ஆனால், தமிழ் பழமையிலும் இன்னும் 8 கோடிக்கு மேற்பட்ட மக்களின் தாய்மொழியாக பயன்பாட்டில் இருப்பது தனியொரு வளமை. அது தமிழர்களுக்கு தன்னிகரில்லா பெருமை.
செவ்வாய், 18 அக்டோபர், 2016
தாய் மொழி!!
தமிழை வாழ வைக்க சில வழிகள் உண்டு. வீட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் தமிழாக இருக்க வேண்டும். ஒரு தமிழன் இன்னொரு தமிழனைச் சந்தித்தால் தமிழில் பேச வேண்டும். கோயில் வழிபாடு தமிழில் இல்லாத கோயில்களுக்குப் போகக் கூடாது.
தமிழ் தெரியாத கடவுளர் எங்களுக்குத் தேவையில்லை. எங்கேயிருந்து வந்தார்களோ அங்கு போய்விட வேண்டும். எடுத்துக்காட்டு வாதாபி கணபதி. அவர் வாதாபிக்குப் போய்விட வேண்டும். திருமணம் செந்தமிழில் திருக்குறள் ஓதி நடத்த வேண்டும்.
அல்லது திருமுறை ஓதி செய்ய வேண்டும். நுண்கலை கற்றுக் கொடுப்போர் தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு கோயில் கட்டினால் ஒரு தமிழப் பள்ளிக்கூடமும் கட்ட வேண்டும். அங்கே தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் திருக்குறள், நாலடியார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நீதி நெறி இருக்க வேண்டும். அவற்றை பிள்ளைகளுக்கு ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நீதிநெறி சொல்லிக் கொடுக்க வேண்டும்.
தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வுலகிற்கு பல நீதி நூல்களை வழங்கி உள்ளது. அனைத்திற்கும் மேலாக உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழர்களின் ஒப்பற்ற படைப்பாகும். அறம், வீரம் , காதல், சமூக வாழ்வு, இலக்கியம் என பலவற்றையும் உள்ளடடிக்கிய சங்க இலக்கிய நூல்கள் ஏராளாமாக உள்ளன. இவ்வனைத்தும் உலக மக்கள் படித்து பயன்பெற வேண்டிய நூல்களாகும்.
உதாரணம் ஓர் அம்மா,ஓர் இலை,ஓர் உடும்பு,ஓர் ஓளவைப்பாட்டி.
மற்றய (மெய் எழுத்துக்களுக்கு) முன்னால் ஊதாரணம் ஞ ய ன ந ம ண ய ர ல வ ழ ற பேன்றவைகளுக்கு முன் ஒரு என்ற எழுத்து வரும்.
ஊதாரணம் ஒருமாடு,ஒரு ஞானி,ஒரு நண்பன்.
ஆக்கம்
ஆசியர் தமிழன்பன் லண்டன்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247. 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் .
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர் பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும்.ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும்,நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடலும் தான்..
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
1.ஞாயிறு – ஞாயிறு 2.திங்கள் – திங்கள் 3.செவ்வாய் – செவ்வாய் 4.புதன் – அறிவன் 5.வியாழன் – வியாழன் 6.வெள்ளி – வெள்ளி 7.சனி – காரி தமிழன் காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்தான். 1.இளவேனில் -தை – மாசி மாதங்கள் 2.முதுவேனில் -பங்குனி – சித்திரை மாதங்கள் 3.கார் – வைகாசி – ஆனி மாதங்கள் 4.கூதிர் – ஆடி – ஆவணி மாதங்கள் 5.முன்பனி- புரட்டாசி – ஐப்பசி மாதங்கள் 6.பின்பனி– கார்த்திகை – மார்கழி மாதங்கள்
ஆத்திசூடி
1.அறம்செயவிரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவதுசினம் / 2. Control anger. 3. இயல்வதுகரவேல் / 3. Don't forget Charity.4. ஈவதுவிலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையதுவிளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமதுகைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண்எழுத்துஇகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பதுஇகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம்இட்டுஉண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவுஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவதுஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம்பேசேல் / 12. Speak no envy. 13. அகம்சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்றுசொல்லேல் / 14. Don't flip-flop. 15. ஙப்போல்வளை / 15. Bend to befriend. 16. சனிநீராடு / 16. Shower regularly. 17. ஞயம்படஉரை / 17. Sweeten your speech. 18. இடம்படவீடுஎடேல் / 18. Judiciously space your home. 19. இணக்கம்அறிந்துஇணங்கு / 19. Befriend the best. 20. தந்தைதாய்ப்பேண் / 20. Protect your parents. 21. நன்றிமறவேல் / 21. Don't forget gratitude. 22. பருவத்தேபயிர்செய் / 22. Husbandry has its season. 23. மண்பறித்துஉண்ணேல் / 23. Don't land-grab. 24. இயல்புஅலாதனசெய்யேல் / 24. Desist demeaning deeds. 25. அரவம்ஆட்டேல் / 25. Don't play with snakes. 26. இலவம்பஞ்சில்துயில் / 26. Cotton bed better for comfort. 27. வஞ்சகம்பேசேல் / 27. Don't sugar-coat words. 28. அழகுஅலாதனசெய்யேல் / 28. Detest the disorderly. 29. இளமையில்கல் / 29. Learn when young. 30. அரனைமறவேல் / 30. Cherish charity. 31. அனந்தல்ஆடேல் / 31. Over sleeping is obnoxious. 32. கடிவதுமற / 32. Constant anger is corrosive. 33. காப்பதுவிரதம் / 33. Saving lives superior to fasting. 34. கிழமைப்படவாழ் / 34. Make wealth beneficial. 35. கீழ்மைஅகற்று / 35. Distance from the wicked. 36. குணமதுகைவிடேல் / 36. Keep all that are useful. 37. கூடிப்பிரியேல் / 37. Don't forsake friends. 38. கெடுப்பதுஒழி / 38. Abandon animosity. 39. கேள்விமுயல் / 39. Learn from the learned. 40. கைவினைகரவேல் / 40. Don't hide knowledge. 41. கொள்ளைவிரும்பேல் / 41. Don't swindle. 42. கோதாட்டுஒழி / 42. Ban all illegal games. 43. கெளவைஅகற்று / 43. Don't vilify. 44. சக்கரநெறிநில் / 44. Honor your Lands Constitution. 45. சான்றோர்இனத்துஇரு / 45. Associate with the noble. 46. சித்திரம்பேசேல் / 46. Stop being paradoxical. 47. சீர்மைமறவேல் / 47. Remember to be righteous. 48. சுளிக்கச்சொல்லேல் / 48. Don't hurt others feelings. 49. சூதுவிரும்பேல் / 49. Don't gamble. 50. செய்வனதிருந்தச்செய் / 50. Action with perfection. 51. சேரிடம்அறிந்துசேர் / 51. Seek out good friends. 52. சையெனத்திரியேல் / 52. Avoid being insulted. 53. சொற்சோர்வுபடேல் / 53. Don't show fatigue in conversation. 54. சோம்பித்திரியேல் / 54. Don't be a lazybones. 55. தக்கோன்எனத்திரி / 55. Be trustworthy. 56. தானமதுவிரும்பு / 56. Be kind to the unfortunate. 57. திருமாலுக்குஅடிமைசெய் / 57. Serve the protector. 58. தீவினைஅகற்று / 58. Don't sin. 59. துன்பத்திற்குஇடம்கொடேல் / 59. Don't attract suffering. 60. தூக்கிவினைசெய் / 60. Deliberate every action. 61. தெய்வம்இகழேல் / 61. Don't defame the divine. 62. தேசத்தோடுஒட்டிவாழ் / 62. Live in unison with your countrymen. 63. தையல்சொல்கேளேல் / 63. Don't listen to the designing. 64. தொன்மைமறவேல் / 64. Don't forget your past glory. 65. தோற்பனதொடரேல் / 65. Don't compete if sure of defeat. 66. நன்மைகடைப்பிடி / 66. Adhere to the beneficial. 67. நாடுஒப்பனசெய் / 67. Do nationally agreeables. 68. நிலையில்பிரியேல் / 68. Don't depart from good standing. 69. நீர்விளையாடேல் / 69. Don't jump into a watery grave. 70. நுண்மைநுகரேல் / 70. Don't over snack. 71. நூல்பலகல் / 71. Read variety of materials. 72. நெற்பயிர்விளைவுசெய் / 72. Grow your own staple. 73. நேர்படஒழுகு / 73. Exhibit good manners always. 74. நைவினைநணுகேல் / 74. Don't involve in destruction. 75. நொய்யஉரையேல் / 75. Don't dabble in sleaze. 76. நோய்க்குஇடம்கொடேல் / 76. Avoid unhealthy lifestyle. 77. பழிப்பனபகரேல் / 77. Speak no vulgarity. 78. பாம்பொடுபழகேல் / 78. Keep away from the vicious. 79. பிழைபடச்சொல்லேல் / 79. Watch out for self incrimination. 80. பீடுபெறநில் / 80. Follow path of honor. 81. புகழ்ந்தாரைப்போற்றிவாழ் / 81. Protect your benefactor. 82. பூமிதிருத்திஉண் / 82. Cultivate the land and feed. 83. பெரியாரைத்துணைக்கொள் / 83. Seek help from the old and wise. 84. பேதைமைஅகற்று / 84. Eradicate ignorance. 85. பையலோடுஇணங்கேல் / 85. Don't comply with idiots. 86. பொருள்தனைப்போற்றிவாழ் / 86. Protect and enhance your wealth. 87. போர்த்தொழில்புரியேல் / 87. Don't encourage war. 88. மனம்தடுமாறேல் / 88. Don't vacillate. 89. மாற்றானுக்குஇடம்கொடேல் / 89. Don't accommodate your enemy. 90. மிகைபடச்சொல்லேல் / 90. Don't over dramatize. 91. மீதூண்விரும்பேல் / 91. Don't be a glutton. 92. முனைமுகத்துநில்லேல் / 92. Don't join an unjust fight. 93. மூர்க்கரோடுஇணங்கேல் / 93. Don't agree with the stubborn. 94. மெல்லிநல்லாள்தோள்சேர் / 94. Stick with your exemplary wife. 95. மேன்மக்கள்சொல்கேள் / 95. Listen to men of quality. 96. மைவிழியார்மனைஅகல் / 96. Dissociate from the jealous. 97. மொழிவதுஅறமொழி / 97. Speak with clarity. 98. மோகத்தைமுனி / 98. Hate any desire for lust. 99. வல்லமைபேசேல் / 99. Don't self praise. 100. வாதுமுற்கூறேல் / 100. Don't gossip or spread rumor. 101. வித்தைவிரும்பு / 101. Long to learn. 102. வீடுபெறநில் / 102. Work for a peaceful life. 103. உத்தமனாய்இரு / 103. Lead exemplary life. 104. ஊருடன்கூடிவாழ் / 104. Live amicably. 105. வெட்டெனப்பேசேல் / 105. Don't be harsh with words and deeds. 106. வேண்டிவினைசெயேல் / 106. Don't premeditate harm. 107. வைகறைத்துயில்எழு / 107. Be an early-riser. 108. ஒன்னாரைத்தேறேல் / 108. Never join your enemy. 109. ஓரம்சொல்லேல் / 109. Be impartial in judgement. - ஔவையார்.
#பிறமொழி = #தாய்மொழி *ஸ்வீட் ஸ்டால் = இனிப்பகம் *காபி பார் = குளம்பிக் கடை *ஹோட்டல் = உணவகம் *தியேட்டர் = திரையகம் * போட்டோ ஸ்டூடியோ = புகைப்பட (அ) நிழற்பட நிலையம் *ஆட்டோ = தானி *பியூட்டி பார்லர் = அழகு நிலையம் (அ) எழில் புனையகம் *ரெடிமேட்ஸ் = ஆயத்த ஆடைகள் *பேக்கரி = அடுமனை *பேட்டரி = மின்கலன்
பெண்ணின் பருவங்கள் ஏழு... > பேதை : 1 முதல் 8 வயது வரை
> பெதும்பை : 9 முதல் 10 வயது வரை...
> மங்கை : 11 முதல் 14 வயது வரை...
> மடந்தை : 15 முதல் 18 வயது வரை...
> அரிவை : 19 முதல் 24 வயது வரை...
> தெரிவை : 25 முதல் 29 வயது வரை...
> பேரிளம் : பெண் 30 வயது முதல்...
பெண்மையை போற்றுவோம்...!
ஆய கலைகள் அறுபத்து நான்கும்!!!
பிதாகரஸ் தேற்றம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே" - போதையனார்
விளக்கம்: இவற்றின் பொருள் செங்கோண முக்கோணத்தின், நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும்.
இவ்வளவு எளிமையாக கர்ணத்தின் நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்க்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.
இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
போதையனார் கோட்பாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் அதாவது Square root இல்லாமலேயே, நம்மால் இந்த கணிதமுறையை பயன்படுத்த முடியும். ✔
தமிழன் ஒருவேளை கற்றலையும் / கல்வியையும் பொதுவுடமையாக, உலகறியச் செய்து இருந்தால் .... அவர்கள் தரணி எங்கும் அறியப்பட்டு இருப்பார்கள்."
எவ்வளவு எளிமையாக உள்ளது.! தமிழின் பெருமைகளை தமிழர்களே உணர்வீர்களாக..!
வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப்பெயர்கள் 1 டிரேடரஸ் : வணிக மையம் 2 கார்ப்பரேஷன் : நிறுவனம் 3 ஏஜென்சி : முகவாண்மை 4 சென்டர் : ம்மைய, நிலையம் 5 எம்போரியம் : விற்பனையகம் 6 ஸ்டோரஸ் : பண்டகசாலை 7 ஷாப் : கடை, அங்காடி 8 அண்கோ : குழுமம் 9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி 10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி 11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம் 12 டிராவல்ஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 13 எலக்டிரிகல்ஸ் : மின்பொருள் பண்டகசாலை 14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம் 15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை 16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம் 17 டிம்பரஸ் : மரக்கடை 18 பிரிண்டரஸ் : அச்சகம் 19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம் 20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம் 21 லித்தோஸ் : வண்ண அச்சகம் 22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம் 23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம் 24 காபி பார் : குளம்பிக் கடை 25 ஹோட்டல் : உணவகம் 26 டெய்லரஸ் ; தையலகம் 27 டெக்ஸ்டைலஸ் : துணியகம் 28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம் 29 சினிமா தியேட்டர் : திரையகம் 30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம் 31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம் 32 சிட் பண்ட் : நிதியகம் 33 பேங்க் : வைப்பகம் 34 லாண்டரி : வெளுப்பகம் 35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம் 36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம் 37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி 38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி 39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம் 40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார் 41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம் 42 ஆட்டோ : தானி 43 ஆட்டோமொபைலஸ் தானியங்கியகம் 44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம் 45 பேக்கரி : அடுமனை 46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம் 47 பசார் : கடைத்தெரு, அங்காடி 48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம் 49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை 50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி நன்றி செந்தமிழ் சோழன் விஜய் குமார் ..
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே!