மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!
பகுதி-1
நாத்திகவாதிகள் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.”கடவுள் இல்லை!!!”இதற்கு மாற்றுக் கருத்தே அவர்களிடம் கிடையாது. ஆனால் ஆத்திகவாதிகள் தான் குழப்புகின்றார்கள்.
“கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம்!!!” என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.
“கடவுள் இருக்கின்றார்… ஆனால் என் கடவுள் மட்டுமே இருக்கின்றார்… அடுத்தவன் கூறும் கடவுள் வெறும் பொய், பித்தலாட்டம்!!!” என்னும் இதேக் கருத்தைத் தான் அனைத்து மதத்தினரும் சுருதி மாறாமல் கூறுகின்றனர்.
மேலும் ஒரு சிலர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றக் கோட்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
இன்னும் சிலர் இதற்கு எல்லாம் ஒருப் படி மேலே போய் ‘நான் கடவுள்’ என்றும் கூறிக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படி கடவுள் இருக்கின்றார் என்றுக் கூறும் நபர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூறுவதினால் ‘கடவுள் இருக்கின்றாரா?” என்றக் கேள்வி மெய்யாகவே நம்முள் எழுகின்றது.
கடவுள் இருக்கின்றாரா?
அப்படி இருந்தால் அவர் எந்த மதத்தினைச் சார்ந்தவர்?
மனிதன் என்பவன் யார்?
அவன் படைக்கப்பட்டானா அல்லது ஒரு விபத்தினால் உருவானானா?
போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! எனவே உங்களது விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க்கப்படுகின்றன.
**************************************************************************
உங்களுக்குத் தெரியுமா???
போன்றக் கேள்விகளுக்கு விடையினைத் தேடும் ஒரு வரலாற்றுத் தேடல் முயற்சியே இந்தப் தொடர் பதிவு!!! எனவே உங்களது விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க்கப்படுகின்றன.
**************************************************************************
உங்களுக்குத் தெரியுமா???
உலகில் உள்ள மதங்கள் யாவும் ஆசிய கண்டத்திலேயே தங்களது பிறப்பினைக் கொண்டு இருக்கின்றன. அவை கிருத்துவம், இசுலாம், சைவம், வைணவம், சமணம் மற்றும் பௌத்தம்.
இதில் சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை நாத்திக மதங்கள். அவை கடவுள் இல்லை என்றக் கொள்கையினை உடையவை.
மற்ற சமயங்கள் முழுவதும் ஆத்திக சமயங்கள்.
இதில் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியத் தகவல் என்னவென்றால் உலகில் நாத்திக சமயங்கள் இந்தியாவினால் மட்டுமே தோன்றி இருக்கின்றன.
புத்தரால் தோற்றுவிக்கப் பட்டதும் அசோகரால் நாடு முழுக்கப் பரப்பப் பட்ட புத்த மதம், இலங்கையில் இருக்கின்றது… சீனத்தில் இருக்கின்றது… சப்பானில் இருக்கின்றது…. ஆனால் அது பிறந்த இடமான இந்தியாவில் இன்று அது பெரிய அளவில் இல்லை.
இதே நிலை தான் சமணத்திற்கும்…!!!
ஏன்?
இன்று இந்தியா என்றால் அது இந்து நாடு என்கின்றார்களே பெரும்பான்மையினர்… அந்த நிலை எதனால் வந்தது?
வட நாட்டில் தோன்றிய பௌத்த மற்றும் சமண மதங்கள் தமிழகத்தில் கூட வேருன்றி இருந்த சூழ்நிலையில் எவ்வாறு தங்கள் செல்வாக்கினை இழந்தன?.
இந்து மதம் என்றால் என்ன?… இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?
இந்து மதம் என்றால் என்ன?… இது தான் உலகில் மிகவும் பழமையான மதம் என்கின்றார்களே… உண்மையா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலினைக் காண நாம் முதலில்
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!!!
இந்து மதத்தினை சற்று வரலாற்று சம்பவங்களை வைத்துப் பார்ப்போம்.!!!
1794 …
கொல்கத்தா - பிரிட்டுசு இந்தியாவின் அன்றைய தலைநகரம்…!!!
தங்களின் ஆளுமைக்குட்பட்ட இந்தியாவின் மக்களை அவர்களின் மதங்களுக்கு உரிய சட்டங்களை வைத்துப் பிரித்து அவர்களுக்கு சட்டங்களை இயற்ற அப்போதைய பிரிட்டுசு உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி சர் வில்லியம் சோன்ஸ் (sir William Jones) முயன்றுக் கொண்டு இருக்கின்றார். அவருக்கு முன்னே ஒரு சோதனை.
கிருத்துவத்தை பின்பற்றுபவர்கள் கிருத்துவர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் விவிலியம்.
இசுலாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள்…. அவர்களுக்கு நீதிநூல் திருக்குரான்.
ஆனால் மற்ற மக்களை என்ன செய்வது… அவர்களுக்குரிய நீதிநூல் என்ன? - இந்தக் கேள்விக்குத் தான் அவர் விடைத் தேடிக் கொண்டு இருந்தார்.
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???
இந்த மக்களை எவ்வாறு அழைப்பது???
“சரி… இந்த மக்கள் அனைவரும் சிந்து சமவெளி நாகரீகத்தில் தோன்றியவர்கள் எனவே அவர்களை சிந்து மக்கள் என்று அழைக்கலாம்…” என்று அவர் ஒரு வழியாக முடிவு செய்தாலும் இன்னும் அந்த நீதி நூலுக்கு அவருக்கு விடைக் கிடைத்தப்பாடில்லை.
அந்த நிலையில் தான் சில இந்தியர்கள் (ஆரியர்கள் - இவர்களைப் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்) தங்கள் மதத்தின் நீதி நூல் என மனு தர்ம சாசுதிரத்தை எடுத்து அவரிடம் தருகின்றனர்.
“ஆ!!! விடை கிடைத்தாயிற்று!!!” என்று அவரும் பெருமூச்சினை விட்டவாறே ”இந்த இந்து மக்களுக்கு (சிந்து என்பதை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாமல் இந்து என்று அவர் பெயர் இட்டு விட்டார்) உரிய நீதி நூல் மனு தர்ம சாசுதிரம்” என்றுக் கூறி சட்டத்தை இயற்றி விட்டார்.
இந்த நிகழ்வுக்கு முன்னர் வரையிலும் இந்து என்ற சொல் எந்த இலக்கியத்திலோ அல்லது கல்வெட்டுகளிலோ இடம் பெற்றதுக் கிடையாது.!!! 1794 ஆம் வருடத்தில் தான் இந்து என்றச் சொல் பிறப்பெடுக்கின்றது.
“சரி… அதனால் என்ன கெட்டு போய் விட்டது” என்கின்றீர்களா… நிச்சயம் ஒன்றுமில்லை… ஆனால் வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…!!!
சரி … இப்பொழுது ஒரு கேள்வி…!!!
இந்து மதம் எங்கே தோன்றியது…???
“வட நாட்டில்… இமாலயத்தில்” என்கின்றீர்களா!!!
“இல்லை!!!” என்கின்றேன் நான்.
என்னுடைய கூற்றிற்கு நான் ஆதாரங்களைக் கூறும் முன் நாம் சற்று இந்து மதத்தை விரிவாகப் பார்ப்போம்!!!
பயணிப்போம் வரலாற்றினுள்…!!!
பி.கு :
மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை. நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும்,
நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில்,
அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.
தவறு என்று நினைத்தால் கூறுங்கள்… விவாதிப்போம்… நான் தவறென்றால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்!!!
மதம்… இறைவன்… ஆகிய இரண்டும் உணர்ச்சிமிகு தலைப்புகள். இதை நான் யார் மனதையும் புண்ணாக்கும் எண்ணத்திலோ அல்லது யார் நம்பிக்கையினையும் குலைக்கும் எண்ணத்திலோ எழுத வில்லை. நான் அறிந்த கருத்துக்களை சரி பார்க்கவும்,
நான் கூறுவன உண்மையாய் இருக்கும் பட்சத்தில்,
அதை மற்ற நண்பர்களும் அறிய உதவும் வண்ணம் என்னால் முடிந்த கடமையாக இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.
தவறு என்று நினைத்தால் கூறுங்கள்… விவாதிப்போம்… நான் தவறென்றால் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்!!!
இந்தச் செய்திகளை நான் மா.சோ.விக்டர் அவர்கள் எழுதிய ’குமரிக்கண்டம்’ மற்றும் ’தமிழர் சமயம்’
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.
என்ற நூல்களில் இருந்தும்,
தெய்வநாயகம் அய்யா அவர்களின் ஆராய்ச்சியில் இருந்தும் அறிந்துக் கொண்டவையே.
அந்தச்செய்திகளை என்னுடைய நடையில் என்னுடைய பார்வையினையும் சேர்த்து
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு...
தொகுத்து எழுதுவதே இந்தப் பதிவு...
இந்து மதம் வேறு புத்த மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சீக்கிய மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சமண மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சீக்கிய மதம் வேறு…!!!
இந்து மதம் வேறு சமண மதம் வேறு…!!!
அப்படி என்றால் இந்து மதம் என்றால் என்ன என்றக் கேள்வி எழுகின்றது.
அக்கேள்விக்கான விடை…
அக்கேள்விக்கான விடை…
இந்து மதம் என்பது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மதங்களின் தொகுப்பே ஆகும்.
இந்துக்கள் என்பவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய மதங்களை பின்பற்றியவர்களே ஆவார்கள்!!!
இந்துக்கள் என்பவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய மதங்களை பின்பற்றியவர்களே ஆவார்கள்!!!
சைவம் மற்றும் வைணவம் பற்றி அறியாத நண்பர்களுக்கு… இதோ தசாவதாரத்துல (அதாங்க கமல் படம்) இருந்து ஒருக் காட்சி…
நெப்போலியன் (பாண்டிய மன்னன்) : ஓம் நமச்சிவாய என்று சொல்லிவிடு நம்பி… உனக்கு உயிர் பிச்சை அளிக்கின்றேன். (இவரு சைவம்)
கமல் (இவரு வைணவத் துறவி) : ஓம்….. நமோ நாராயணா … (இவரு வைணவம்)
பொதுவாக சொல்ல வேண்டும் என்றால்,
சிவனை வணங்குபவர்கள் சைவர்கள்…!!!
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள்…!!!
நிற்க…!!!
சிவனை வணங்குபவர்கள் சைவர்கள்…!!!
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள்…!!!
நிற்க…!!!
இப்பொழுது நாம் இந்து மதம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டோம்… (ஏற்கனவே தெரிஞ்ச விசயத்த தான்யா சொல்லிருக்க.. புதுசா ஏதாவது சொல்லு அப்படின்னு சொல்றீங்களா :) … சொல்லிருவோம்)
இப்பொழுது இந்து மதம், அதாவது சைவம் மற்றும் வைணவ மதங்கள் எங்கே உருவாகியன என்பதினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னாடி நீங்கள் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்… இந்து மதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் என்று…!!!
உங்கள் மனதில் இமயமலை (வட நாடு) என்ற எண்ணம் வந்ததா???
“ஏன் எனில் கயிலாயம், அதாங்க சிவன் இருக்குறதா சொல்றாங்களே அந்த இடம், இமயமலையில் இருக்கின்றது. சிவனின் தலையில் இருந்து படரும் கங்கையும் அங்கேத் தான் இருக்கின்றது… வேதங்கள் என்று சொல்பவைகளும் இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..” என்றக் காரணங்களும் தோன்றியனவா!!!
நல்லது…!!!
“ஏன் எனில் கயிலாயம், அதாங்க சிவன் இருக்குறதா சொல்றாங்களே அந்த இடம், இமயமலையில் இருக்கின்றது. சிவனின் தலையில் இருந்து படரும் கங்கையும் அங்கேத் தான் இருக்கின்றது… வேதங்கள் என்று சொல்பவைகளும் இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்..” என்றக் காரணங்களும் தோன்றியனவா!!!
நல்லது…!!!
ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம்.
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!
அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்!!!
இப்பொழுது ஒருக் கேள்வி…!!!
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???
சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால்,
அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும்.
மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன???
சைவத்தின் தலைமைக் கோவில் : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.
வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் -இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.
தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!
ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..!!!
மேலும்,சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.
வைணவம் வளர்த்த
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.
ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.
சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…!!!
ஏங்க சமசுகிருதத்தினால் வட நாட்டினில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏங்க?
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏங்க?
சமசுகிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமசுகிருதம் பேசப்பட்ட இடத்தில சமசுகிருதத்தை பேசியவர்களால் சமசுகிருததால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?
ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?
கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன???
பதில் கூற மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.
ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன் கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியையும் பௌத்த மதத்தினையும் சற்றுப் பார்ப்போம்.
பயணிப்போம்..!!!
பயணிப்போம்..!!!
அசோகரும் பௌத்தமும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!-3
வெற்றி… மாபெரும் வெற்றி!!!
வெற்றி… மாபெரும் வெற்றி!!!
இருந்தும் அமைதி கிட்டவில்லை அசோகருக்கு…!!!
“சக்கரவர்த்தி தான்… உலகில் உள்ள அனைத்து வசதியும் உள்ளது தான்… ஆனால் நிம்மதி இல்லையே… கண் மூடினால் சடலங்கள் அல்லவா நினைவிற்கு வருகின்றன.. ஒன்றா இரண்டா… லட்சக்கணக்கான சடலங்கள் அல்லவா தோன்றுகின்றன… இந்தப் பாழாய்ப்போன கலிங்கத்து யுத்தத்தை நடத்தாமலேயே இருந்திருக்கலாமே!!!” என்று தனது அரண்மனையில் எண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது புத்தரைப் பற்றிய எண்ணம் வருகின்றது அசோகருக்கு.
“ஆ… புத்தர்!!! அவரின் கருத்துகள் தான் எத்தனை அழகானவை… ஆழமானவையும் கூட. அவற்றினை நான் ஏன் கவனிக்க மறந்தேன். எல்லா உயிர்களும் சமம், அவை அனைத்திற்கும் அன்பினை நாம் காட்டுவதே இப்பிறவியின் பயன் என்ற அந்தக் கருத்துக்களை நான் எவ்வாறு கேளாது போனேன்.
அன்பினை முற்றிலும் மறந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று விட்டேனே…!!!
போதும் இந்த வெறி… பணம், பதவி, சுகம் ஆகியவற்றினைத் துறந்த புத்தனின் வழி தான் இனி என் வழி…!!!
அமைச்சரே… அழையுங்கள் புத்தத் துறவிகளை…
கூடவே எனது அன்புப் புதல்வியையும் புதல்வனையும் சேர்த்தே அழையுங்கள்!!!
உலகில் அன்புத் திகழ அவர்கள் திக்கெட்டும் புத்தத்தை பரப்பட்டும்!!!
அசோகன் போர்வெறியன் அல்ல… அவன் மனித நேயத்தினைப் பரப்பியவன் என்றே உலகம் அவனை நினைவில் கொள்ளட்டும்” என்றவாறே அசோகர் புத்த மதத்தினை பரப்ப ஆரம்பிகின்றார்.
போதும் இந்த வெறி… பணம், பதவி, சுகம் ஆகியவற்றினைத் துறந்த புத்தனின் வழி தான் இனி என் வழி…!!!
அமைச்சரே… அழையுங்கள் புத்தத் துறவிகளை…
கூடவே எனது அன்புப் புதல்வியையும் புதல்வனையும் சேர்த்தே அழையுங்கள்!!!
உலகில் அன்புத் திகழ அவர்கள் திக்கெட்டும் புத்தத்தை பரப்பட்டும்!!!
அசோகன் போர்வெறியன் அல்ல… அவன் மனித நேயத்தினைப் பரப்பியவன் என்றே உலகம் அவனை நினைவில் கொள்ளட்டும்” என்றவாறே அசோகர் புத்த மதத்தினை பரப்ப ஆரம்பிகின்றார்.
புத்தமும் பல்வேறு நாடுகளில் பரப்பப்படுகின்றது.
இந்தக் காலம் கி.மு 1 ஆம் நூற்றாண்டு!!! (இதை இரண்டாம் நூற்றாண்டு என்றுக் கூறுவோரும் உளர்).
அந்தக் காலத்தில் கிட்டதட்ட வட மற்றும் மத்திய இந்தியா முழுவதும் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால் புத்தம் அங்கே எளிதாக பரவியது. அந்தத் தாக்கம் தமிழகத்திலும் ஏற்ப்பட புத்தம் தமிழகத்திலும் பரவுகின்றது.
ஏற்கனவே மகாவீரரால் உருவாக்கப்பட்ட சமண சமயமும் தமிழகத்தில் அந்தக் காலக் கட்டத்தில் பரவி இருந்தது என்றச் செய்தியையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்…!!!
சரி அசோகர் புத்த சமயத்தினைப் பரப்பிக் கொண்டு இருக்கட்டும்… நாம் அதற்குள் சற்று சமணம் மற்றும் புத்த சமயங்களைப் பற்றி ஒரு எட்டு சென்றுப் பார்த்து விட்டு வந்து விடலாம்…!!!
இவ்விரண்டு மதங்களுமே நாத்திக மதங்கள்… அதாவது கடவுள் இல்லை என்று சொல்லுபவை!!!
கடவுள் இல்லை…!!!
அனைத்து உயிர்களும் சமம், மனித உயிராய் இருந்தாலும் சரி அது மிருக உயிராய் இருந்தாலும் சரி…!!!
நீ செய்யும் செயல்களுக்கு ஏற்ப உனக்கு அடுத்த பிறவி ஏற்படும்…!!!
இவை தான் அந்த இரண்டு சமயங்களின் முக்கியக் கோட்பாடுகள். நிற்க!!!
இப்பொழுது ஒருக் கேள்வி, ஏன் இந்தச் சமயங்கள் தோன்றின?
தெரியவில்லையா…!!!
சரி அப்படி என்றால் இன்னொருக் கேள்வி, பெரியார் ஏன் கடவுள் இல்லை என்று முதலில் கூற ஆரம்பித்தார்?
சாதி இல்லை…!!!
அப்படி இல்லாத சாதிகளை (சாதி ஏற்றத் தாழ்வுகளை) படைத்தது இறைவன் என்றால் அந்த இறைவனும் இல்லை…!!!
இது தான் பெரியாரின் கூற்று.
சாதி ஏற்றத் தாழ்வுகளை பெரியார் எதிர்த்தார். அந்த ஏற்றத் தாழ்வுகள் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்றதினால் அவர் கடவுளை எதிர்த்தார்!!!
கடவுள் இல்லை எனக் கூற ஆரம்பித்தார்!!!
கடவுள் இல்லை எனக் கூற ஆரம்பித்தார்!!!
அதேப் போல் தான் இந்த சமயங்களும் தோன்றின!!!
இவை சாதிகளை எதிர்க்கவில்லை (ஏனெனில் அப்பொழுது ஏற்றத் தாழ்வுகள் இல்லை)…!!!
ஆனால் இவை பலி இடும் பழக்கத்தை எதிர்த்தன.
அந்தக் காலத்தில் இறைவனை வழிப்பட விலங்குகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்தது. (ஏன் இன்னுமே சில கோவில்களில் இந்தப் பழக்கம் இருக்கின்றதை நம்மால் காண முடிகின்றது. அட அதாங்க ’கடா வெட்டு’).
சமணமும் பௌத்தமும் உயிர்களைக் கொல்வதை எதிர்த்தன.
அவை எல்லா உயிர்களும் சமம் என்றன.
அவை எல்லா உயிர்களும் சமம் என்றன.
“இல்லை… இந்த பலிகள் கடவுளுக்காக” என்றனர் மக்கள்.
“அப்படியா… அப்படியென்றால் கடவுள் என்ற ஒருவர் இல்லை… இல்லாத ஒருவருக்கு பலி எதற்கு” என்றன அந்தச் சமயங்கள்.
மக்கள் சிந்தித்தார்கள்.
“அப்படி என்றால் நான் இறந்தால் எங்கே செல்லுவேன்” என்றார்கள்.
“உன் முன் வினைப்படி நீ மீண்டும் பிறப்பாய், மனிதனாய் இல்லை மிருகமாய் இல்லை மரமாய்… ஏனெனில் அனைத்தும் ஒன்றே…” என்றன அந்த மதங்கள்.
மக்கள் அந்த மதங்களுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார்கள்!!!
மக்கள் அந்த மதங்களுக்கு செவி சாய்க்க ஆரம்பித்தார்கள்!!!
இது தான் அந்த மதங்கள் தோன்றியமைக்கு உரிய முக்கிய காரணம்.
இப்பொழுது நாம் அசோகரிடம் மீண்டும் செல்வோம்…!!!
அசோகரின் காலம் கிமு 1 ஆம் நூற்றாண்டு என்று நாம் கண்டோம்.
அவர் புத்தத்தை இந்தியா முழுமையும் பரப்புகின்றார் என்றும் கண்டோம்.
சரி, இப்பொழுது ஒருக் கேள்வி… (என்னய்யா கேள்வி கேள்வியா கேட்டுத் தள்ளுகின்றீர் அப்படின்னு கேட்குறீங்களா…
சரி உங்களுக்காக இந்தக் கேள்வியை தேர்ந்து எடுக்கும் முறையில் கேட்கிறேன் :))
தமிழகத்தில் ஒருக் கருத்தினைப் பரப்ப எந்த மொழியில் நாம் அதனைப் பரப்ப வேண்டும்?
அ) இந்தி
ஆ) பிரஞ்சு
இ) தமிழ்
ஈ) பஞ்சாபி
(எப்படி கடினப்பட்டு கோடிசுவரன் நிகழ்ச்சிக்கு ஒரு கேள்வியை தயார் பண்ணிட்டோம்ல)
அ) இந்தி
ஆ) பிரஞ்சு
இ) தமிழ்
ஈ) பஞ்சாபி
(எப்படி கடினப்பட்டு கோடிசுவரன் நிகழ்ச்சிக்கு ஒரு கேள்வியை தயார் பண்ணிட்டோம்ல)
விடை என்ன?
தமிழ் அப்படின்னு சட்டுன்னு சொல்றீங்களா…வாழ்த்துக்கள்!!! (எனக்குத் தெரியுமுங்க நீங்க புத்திசாலின்னு)
ஒரு நாட்டில் ஒருக் கருத்தினை பரப்ப வேண்டும் என்றால், அந்தக் கருத்தை அந்த நாட்டின் மொழியிலேயே பரப்ப வேண்டும்.
நமக்குத் தெரிந்து இருக்கும் இந்த விடயம், அசோகருக்குத் தெரியாமலா இருக்கும்.
அப்படி என்றால் ஏன் அவர் சமசுகிருதத்தில் கல்வெட்டுக்களை செதுக்கவில்லை???
சமசுகிருதம் கோடி வருடங்களுக்கு முன்னரே இருக்கின்றது… அது தான் மற்ற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி என்றால்… ஏன் அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்தவில்லை.
பாலி, தமிழ், அரமியம் மற்றும் கிரேக்கத்தில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகள், ஏன் சமசுகிருதத்தில் இல்லை?
அது தேவமொழிங்க.. அதை மக்களுடன் பேசுவதற்கு பயன்படுத்தமாட்டார்கள். அப்படின்னு சொன்னீங்கனா?
ஏங்க திடீர்னு கிபி 2 ஆம் நூற்றாண்டுல மட்டும் சமசுகிருதத்துல கல்வெட்டுகள் கிடைக்குது. அப்ப அது தேவமொழி கிடையாதா?
உண்மையில் அசோகர் சமசுகிருதம் பயன்படுத்தவில்லை.
ஏனெனில் அப்பொழுது உலகில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை!!! (இதைப் பற்றியும் பல தகவல்களை நாம் விரிவாக வேறு பதிவுகளில் பார்ப்போம்).
எனவே உலகில் அப்பொழுது இருந்த மற்ற மொழிகளில் புத்தத்தை அசோகர் பரப்புகிறார்.
‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று புத்தம் பரவுகின்றது. வேகமாக!!!
சரி கிமு ஒன்றாம் நூற்றாண்டு போதும் இப்பொழுது நாம் கிபி 9 ஆம் நூற்றாண்டுக்கு போகப் போகின்றோம்.
இடம்: தமிழகம்
சைவ வைணவச் சமயங்கள் தோன்றி இருந்தாலும் ஒருத் தெளிவின்றி இருக்கின்றன. சங்கத் தமிழ் வளர்த்த தமிழகத்திலும் சமணம் மற்றும் புத்த சமயங்கள் கடவுளை மறுத்துக் கொண்டு பரவி இருக்கின்றன.
சமண மன்னர்களும் இருக்கின்றனர்.
எனவே சமண மக்களும் இருக்கின்றனர்.
தமிழகத்திலே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிறப்பகுதிகளில் சமணம் மற்றும் புத்தம் மட்டுமே இருக்கின்றன.
இந்தக் காலத்தில் தான் மதுரையில் ஒரு எழுச்சி ஏற்படுகிறது.
“நமச் சிவாய வாழ்க… நாதன் தாள் வாழ்க!!!” என்று மாணிக்க வாசகரின் குரல் அதோ கேட்கின்றது… போய் பார்ப்போம். அடுத்த பதிவில்…!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக