செவ்வாய், 27 டிசம்பர், 2016


முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு




இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர தொடக்கமாக பைபிள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வாழ்க்கைகளை எடுத்து கூறுகிறது. ஆபிரகாம் சிலைவணக்க வழிபாடு மிகுந்த சமுதாயத்தில் பிறந்தாலும் யெகொவா தேவனுக்கு மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இறைவனின் ஆசியோடு ஆபிரகாம் ஈசாக்கை பெற்றார். ஈசாக்கு யாக்கோபை பெற்றார். யாக்கோபிற்கு பன்னிரெண்டு புத்திரர்கள் பிறந்தனர். இந்த சந்ததி எகிப்திற்கு குடிபெயர்ந்து பன்னிரெண்டு கோத்திரங்களாக பெருகுகின்றனர். அந்நியர்கள் தங்களது தேசத்தில் பெருகி வருவதை கண்டு அச்சமுற்ற எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்க ஆரம்பிக்கின்றனர். தேவன் ஆபிரகாமை நினைவு கூர்ந்து, அவரது சந்ததியை எகிப்தியர்களுக்கு தப்புவித்து கானான் தேசத்தில் குடி அமர்த்துகிறார். இஸ்ரேல் என்னும் தேசம் மலர்ந்தது.


பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மூவரை உறுதிபடுத்தும் தடயங்களை  கண்டடைவது எளிதல்ல என்றாலும் அவர்களை குறித்த செய்திகளின் உண்மையை கண்டையலாம். பைபிளில் கணக்கிட்டபடி முற்பிதாக்களின் காலம் கி.மு 2000-த்திற்கு ஒத்து வருகிறது. இம்மூன்று தனி நபர்களை குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளை இன்றைய மத்திய கிழக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. குறிப்பாக பண்டைய மத்திய கிழக்கு பட்டணங்களான மரி, நுசி, எப்லா ஆகியவற்றில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கிட்டிய கல்வெட்டுகள் முற்பிதாக்களின் கதைகளோடு ஒத்திருக்கின்றன.

மரி கல்வெட்டுகளில் ஒன்று

ஒரு எப்லா கல்வெட்டு

நுசி கல்வெட்டுகளில் சில
அ) முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்று துல்லியங்கள்:
முற்பிதாக்கள் வாழ்ந்த சூழல் குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகள் வரலாற்று பூர்வமாக உறுதியாகியுள்ளது. அவை நான்கு தலைப்புகளாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

1) பெயர்கள்: பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காணப்படுகின்ற பல பெயர்கள் பழங்கால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • ஆபிரகாம்: ஆபிரகாம் என்ற பெயர் மரி கல்வெட்டுகள் பலவற்றில் பலமுறை காணப்படுகிறது. கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபிலோனிய கல்வெட்டுகள் சிலவற்றிலும் இப்பெயர் காணப்படுகிறது.
  • பென்யமீன்: இப்பெயர் மரி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
  • யாக்கோபு: சாகர்-பசர் என்ற வட மெசபொத்தோமிய பட்டணத்தில் கிட்டிய  கி.மு 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் யாக்கோபு என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் துட்மோஸ் என்ற எகிப்திய மன்னரின் அரச ஓலையில் ஒரு பாலஸ்தீன பட்டணத்தின் பெயர் யாக்கோபு என எழுதப்பட்டுள்ளது. எகிப்தில் வாழ்ந்த ஹிஸ்கோஸ் என்ற பழங்குடி மக்களின் அதிகாரி ஒருவரின் பெயாராகவும்  காணப்படுகிறது.
  • நாகோர்:  ஆபிரகாமின் சகோதரரின் பெயர் நாகோர். இப்பெயர் ஒரு பட்டணத்தின் பெயராக மரி கல்வெட்டுகள் சிலவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • பிற பெயர்கள்: காத், தாண், லேவி, இஸ்மவேல் ஆகிய பெயர்களும் மரி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அசீரிய கல்வெட்டுகள் செரூகு, தேராகு என்னும் பெயருடைய இரு பட்டணங்களை குறிப்பிடுகின்றன. தேராகு ஆபிரகாமின் தந்தை. செரூகு தேராகின் தாத்தனாவார்.  எப்லா கல்வெட்டுகள் சிலவற்றிலும் இஸ்ரவேல், இஸ்மவேல் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.
இப்பெயர்கள் பைபிளில் காணப்படுகின்ற நபர்களையே குறிக்கின்றன என்று நிச்சயித்து கூற முடியாது. எனினும் முற்பிதாக்களின் காலத்தில், சமூகத்தில் இப்பெயர்கள் மக்களிடையே விளங்கி வந்தன என்பதை இதன் மூலம் அறியலாம். இத்தடயங்கள் பைபிளின் சரித்திர செரிவிற்கு ஆதரவாக உள்ளன.

2) பாரம்பாரியங்கள்: முற்பிதாக்களின் கதைகளுக்கு தடயங்களை அக்கால பாரம்பரியங்களில் இருந்தும் பெறலாம். நுசி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரியங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களோடு ஒத்து வருகின்றன. நுசி பட்டணத்தை குறித்து பைபிளில் செய்திகள் இல்லை என்றாலும் அசீரியாவை குறித்து பைபிளில் செய்திகள் உள்ளன. நுசி அசீரியாவின் வடபகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 1925-இல் நுசியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நூற்று கணக்கில் அக்காதிய கல்வெட்டுகள் கிட்டின. இக்கல்வெட்டுகளில் அக்கால மக்களின் வணிகம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில வழக்கங்கள்,
  • குழந்தையில்லா தம்பதிகள் ஒரு வேலைக்காரனை தங்களுக்கு மகனாக தத்தெடுத்து கொள்ளலாம். அவன் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகனாக பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு, அவன் பணிவிடை செய்தால், அவன் வாரிசுரிமை பெறுவான். அத்தம்பதி இறந்த பின், அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை. இச்செய்தி ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. ஆபிரகாமின் தத்து மகனாகவும், வாரிசுரிமையாகவும் எலியேசர் என்ற பணிவிடைக்காரன் காணப்படுகிறான் (ஆதியாகமம் 15:2-4).
  • ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லாவிட்டால், மனைவியானவள் தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும். இச்செய்தியும் ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. சாராள் தன் கணவனுக்கு குழந்தை உண்டாகும்படி தன் அடிமை பெண்ணாகிய ஆகாரை அவருக்கு திருமணம் செய்து வைத்தாள்(ஆதியாகமம் 16:1-3).
  • குழந்தையில்லாத காரணத்தினால் மனைவி தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை மணமுடித்து வைத்த பின்பு, அவளிற்கு குழந்தை பிறக்க நேரிட்டால், அக்குழந்தையே வாரிசுரிமை பெறும். மறுமனையாட்டிக்கு பிறந்த குழந்தைக்கு வாரிசுரிமை இல்லை. சாராள் ஈசாக்கை பெற்றபின், ஆகாரையும், அவள் ஆபிரகாமிற்கு பெற்ற மகனான இஸ்மவேலையும் புறந்தள்ளுகிறாள் (ஆதியாகமம் 21:9-11).
  • ஒருவர் ஒரு பெண்ணிற்கு மணமுடித்து வைப்பதாக வாக்களித்து தனக்கு சகோதரியாக தத்தெடுக்கலாம். தத்தெடுக்கப்பட்டவர் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும், இறந்த பின் துக்கித்து அவரை முறைபடி அடக்கஞ் செய்ய வேண்டும். இவ்வழக்கம் ஆபிரகாமிற்கும் சாராளிற்கும் பொருந்தலாம் (ஆதியாகமம் 20:2).
  • தந்தை தன் முதல் மகனையே குடும்ப வாரிசாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அவர் விரும்பும் எந்த மகனையும் தன் வாரிசுரிமை உடையவன் ஆக்கலாம். உதாரணத்திற்கு, யாக்கோபு தன் மூத்த மகன்களை விடுத்து யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீமையும் மனாசேவையும் தன் வாரிசுரிமைகளாக தெரிந்து கொண்டார் (ஆதியாகமம் 48:5).
  • உயில்கள் குலதெய்வ சிலைகளை மதிப்பிற்குரிய உரிமை சொத்துகளாக எடுத்துரைக்கின்றன. லாபான் தன் குலதெய்வ சிலைகளை தேடி கொண்டு யாக்கோபிடமும், ராகேலிடமும் புறப்பட்டு வந்த காரணத்தை இது தெளிவுபடுத்துகிறது (ஆதியாகமம் 31:19,34,35).
  • ஒருவன் தன் பிறப்புரிமையை தன் சகோதரனுக்கு விற்கலாம். உதாரணத்திற்கு, ஏசா தன் பிறப்புரிமையை யாக்கோபிற்கு விற்றார்(ஆதியாகமம் 25:29-34).
  • சில கல்வெட்டுகள் முதிர்ந்த பெரியவர்கள் இறப்பதற்கு முன்பு ஆசி வழங்கியதாக கூறுகின்றன. இச்செய்தி யாக்கோபு மரணிப்பதற்கு முன்பு ஆசீர்வதித்த சம்பவத்தை ஒத்திருப்பதை காணலாம் (ஆதியாகமம் 48,49).
  • பண்டைய எகிப்தியர்களும், மெசபொத்தோமியர்களும் விருத்தசேதனம் செய்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்திய கல்லறை ஒன்றில் விருத்தசேதன காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதே காலக் கட்டத்தில் தான் ஆபிரகாமும் அவரது சந்ததியும் தன் உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறார் (ஆதியாகமம் 17:9-14).
இவ்வாறு பல பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பைபிளுடன் ஒத்து போகின்றன.முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களும், அக்காலக் கட்ட பாரம்பரியங்களும் ஒத்திருப்பதை இக்கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

3) பாலஸ்தீன பகுதிகளில் நிலவிய சூழல்: அக்கால பாலஸ்தீன வட்டாரத்தில் நிலவிய சூழல் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளை பெரிதும் உண்மைபடுத்துகிறது.
  • மரி கல்வெட்டுகளில் காணப்படும் சுமேரிய நாடோடிகளின் தற்காப்பு படைகள் குறித்த விவரங்கள் ஆதியாகமம் 14-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாமின் போர்குணங்களோடு பொருந்துகின்றன. அக்கால கட்டத்தில் கானான் பகுதிகளில் மக்கள் சிறு ராஜ்ஜியங்களாக பிரிந்து வாழ்ந்ததாகவும், அவ்வப்போது தங்களுக்குள் கூட்டு படைகள் அமைத்து ஆதாயந்தேடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்குறிப்பு ஆதியாகமம் 14ஆம் அதிகாரத்தை ஒத்து காணப்படுகிறது.
ஆதியாகமம் 14:1-2: சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் பண்ணினார்கள்.
  • ஓரிடித்தில் நிலையாய் குடியிராமல், நாடோடிகளாகவும், கூடாரங்கள் அமைத்து வசிப்பவர்களாகவும் அக்கால சுமேரியர்கள் வாழ்ந்தனர் என்றும் தண்ணீர் தேடி அலைவது, கால்நடை மேய்ப்பது, பயிரிடுவது, அண்டை வீட்டாரோடு அமைதி பேணுவது என அவர்களின் அன்றாட வாழ்க்கை கடந்தது என்றும் மரி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகளோடு ஒன்றியுள்ளது.
  • ஆதியாகமம் 34-37- யாக்கோபு சீகேமிலும் பின் எபிரோனிலும் வாழ்ந்த கதை சுமேரிய நாடோடித் தலைவர்களின் வழக்கங்களோடு ஒத்துள்ளது.
4) நெடுந்தூர பயணங்கள்: முற்பிதாக்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டதாக பைபிள் கூறுகிறது. ஆபிரகாம் ஆயிரம் மைல்களை கடந்து கல்தேயருடைய ஊரை விட்டு தெற்கு கானானிற்கு சென்றார் (ஆதி.11:31-12:9). ஈசாக்கிற்கு மணப்பெண்ணை தேடும்படி தன் வேலையாளான எலியேசரை ஆரானில் இருந்து வட மெசபொத்தோமியா வரையுள்ள நானூறு மைல் தூரம் அனுப்பினார் (ஆதி. 24:1-10). யாக்கோபும் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டார்.
  • சுமேரியர்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரானில் இருந்தும் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்தும் தூதர்கள் தெற்கு மெசபொத்தோமியாவையும் ஏலாமையும் வந்தடைந்ததாக மரி கல்வெட்டுகளில் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • ஏத்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் வணிக உறவுகள் இருந்ததாக கனிஷில் கிட்டிய கப்பத்தோக்கியா குறிப்புகள் கூறுகின்றன.
இன்று நம்மிடம் தனி மனிதர்களை குறித்த தொல்பொருள் சான்றுகள் மிக குறைந்தளவே உள்ளன. எனினும், அகப்படும் அகழ்வாராய்ச்சி தடயங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்றுச் செரிவை உறுதிபடுத்தி வருகின்றன.

ஆ) முற்பிதாக்களின் காலகட்டம்:
பைபிள், பைபிள் சாராத பிற வரலாற்று குறிப்புகளில் இருந்து ஆபிரகாம் வாழ்ந்த காலக் கட்டத்தை கணக்கிடுகின்றனர். பைபிள் கூறுகின்ற செய்திகளை குறிப்பிட்டு காணும் போது ஆபிரகாம் கி.மு 22ஆம் நூற்றாண்டின் மையத்தில் பிறந்திருக்கிறார்.
  • சாலொமோன் ராஜா யூத தேவாலயத்தை கி.மு 966-இல் கட்டத் தொடங்கினார் என 99.99% வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கின்றனர்.
  • விடுதலை பயணம் நிகழ்ந்து 480 ஆண்டுகள் ஆன பின்பு சாலொமோன் ராஜா தேவாலயத்தை கட்ட தொடங்கியதாக 1 இராஜாக்கள் 6:1கூறுகிறது. இக்குறிப்பின் படி விடுதலை பயணம் கி.மு 1446 என்ற கால கட்டத்தில் நிகழ்கிறது.
1 இராஜாக்கள் 6:1 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின் மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான் "
  • ஆபிரகாம் ஈசாக்கு பிறந்த போது 100 வயதை எட்டியிருந்தார் (ஆதி 21:5). ஈசாக்கு 60 வயதான போது யாக்கோபை பெற்றார் (ஆதி 25:26). யாக்கோபு எகிப்தை அடைந்த போது 130 வயதுள்ளவராய் இருந்தார் (ஆதி 47:9). இதன்படி ஆபிரகாம் பிறந்த காலம் முதல் யாக்கோபு எகிப்தை அடைந்த காலம் வரை 290 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது.
  • இஸ்ரவேலர்கள் எகிப்தில் வசித்த காலம் 430 ஆண்டுகள். இக்குறிப்பு யாத்திராகமம் 12:40,41-இல் காணப்படுகிறது. இதனை ஆதியாகமம் 15:13, அப்போஸ்தலர் நடபடிகள் 7:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
யாத்திராகமம் 12:40,41 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம். நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது "
இதன் படி ஆபிரகாம் பிறந்த ஆண்டை எளிதாக கணிக்கலாம்.

ஆபிரகாம் பிறந்த ஆண்டு = 966+480+430+290 = கி.மு 2166

இ) முற்பிதாக்கள் வாழ்ந்த பகுதிகள்:
பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி 100 மைல் தொலைவில் அமைந்த 'நிப்பூர்' என்ற மெசப்பொதோமிய பட்டணம் 1890-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தை குறித்து பைபிளில் எந்த செய்திகளும் குறிப்பிடவில்லை. எனினும் நிப்பூரில் கிட்டிய 40,000 கல்வெட்களில் சுமேரிய பகுதிகளை ஆண்ட அரசர்களை குறித்தும், அவர்கள் அரசாண்ட காலத்தை குறித்தும் செய்திகள் உள்ளன. இது ஆதியாகமத்தில் காணப்படும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய அரசர்களின், முற்பிதாக்களின் தலைமுறை பட்டியலை ஒத்திருக்கிறது. மரி, நுசி, எப்லா பட்டணங்களில் கிட்டிய கல்வெட்டுகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்கின்றன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நினிவே பட்டணத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் நோவா கதையை ஒத்த கில்கமெஷ் காப்பியம் என்ற பழங்கதை கல்வெட்டு கிட்டியது.

கில்கமேஷ் காப்பியம்
ஆதியாகமம் 10:10 - " சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள் "
ஆதியாகமம் 10:10-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரேக் பட்டணம் (உருக்) கி.பி 1850-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தில் நிகழ்ந்த தொடர் அகழ்வு ஆராய்ச்சிகளில் கட்டிடங்களும்  பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்றும் கண்டடையப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் பைபிளில் காணப்படும் பண்டைய பட்டணங்களை பெரிதும் உண்மைப்படுத்துகின்றன.

எபிரேய மூலப்பிரதியில் ஆபிரகாம் 'ஊர் கஸ்திம்' என்ற பட்டணத்தில் வசித்ததாக எழுதப்பட்டுள்ளது. செப்துவசிந்தாவில் (கி.மு 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க மொழிப்பெயர்ப்பு) 'கல்தேயருடைய பட்டணமான ஊர்' என இப்பட்டணம் குறிக்கப்பட்டுள்ளது. கல்தேயர்கள் பண்டைய செமிடிக் இனத்தை சேர்ந்தவர்கள். கி.மு 6ஆம் நூற்றாண்டில் இவர்களது ஆதிக்கம் பாபிலோனில் (ஈராக்கில்) பெருகியது. இவர்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்-கஸ்திமும் அடங்கும். நெடுங்காலமாக இப்பட்டணம் அமைந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. கி.பி-1850ஆம் ஆண்டு ஈராக்கில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 'இதன் அமைவிடம் ஊர்' என்று பொறிக்கப்பட்ட ஜிக்கருட் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடம் 'ஊர்' என உறுதி செய்யப்பட்டது.
ஆதியாகமம் 15:7 - "பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார் "
ஊர்-கஸ்திம்

ஊர்-கஸ்திமில் காணப்பட்ட ஜிக்கருட்

கி.மு 2500 கால அளவை சேர்ந்த பொன், வெள்ளி சிலைகளும், கல்வெட்டுகளும், சுத்தி, அரிவாள் போன்ற பொருட்களும் ஊர்-கஸ்திமில் கிடைத்துள்ளன. கி.மு 2130-2022 காலக்கட்ட நிலவரங்களை தெளிவுபடுத்தும் பல தடயங்களும் கிட்டியுள்ளன. உர்-நம்மு, சுல்கி, அமர்-சின், ஷு-சின், இபி-சின் என ஐந்து அரசர்கள் இப்பகுதியை வரிசையாக ஆண்டுள்ளனர். உர்-நம்மு வகுத்த சட்ட விதிகள் பைபிளில் எழுதப்பட்டுள்ள நியாப்பிராமணங்களை ஒத்து காணப்படுகின்றன. உர்-நம்முவின் சட்டவிதிகளே இதுவரை கிட்டியுள்ள சட்ட விதிகளில் மிகவும் தொன்மையானது. இப்பட்டணத்தின் மக்கள் 'சின் (நன்னா)' எனப்படுகிற சுமேரிய நிலவு கடவுளை வழிப்பட்டனர்.
யோசுவா 24:2 - " அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்த போது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள் "
சின் - நன்னா நிலாக்கடவுள்

ஆபிரகாம் ஊரிலிருந்து கானானுக்கு செல்லும் போது, ஆரானில் தங்கினார். ஊரை போல ஆரானும் (காரானூர்) நன்னா வழிபாடு மிகுந்த பட்டணமாக விளங்கியது என எப்லா கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. எனவே ஆபிரகாமின் தந்தை தேராகு ஆரானில் நன்னாவை வழிபடும் பொருட்டு தங்கியிருந்தார் என சந்தேகிக்கப்படுகிறது.
அப்போஸ்தலர் 7:4 - " அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம் பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்த பின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்து குடியிருக்கும்படி செய்தார் "
கானான் தேச எல்லைகளை அமர்னா கல்வெட்டுகள் (கி.மு 14ஆம் நூற்றாண்டு) உறுதிபடுத்துகின்றன. இக்கல்வெட்டுகளில் கானான் எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்ட சிரியா-பாலஸ்தீன மாநிலம் என பொறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி சீதோன் வரை உள்ள இடங்கள் கானானில் அடங்கும்.
ஆதியாகமம் 10:19 - " கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசா மட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டுக்கும் இருந்தது "
கி.மு 2200-2000 காலங்களில் பல கானானிய பட்டணங்கள் நாகரீக வளர்ச்சி மிகுந்து விளங்கின. இக்காலத்தில் தான் ஆபிரகாம் கானானை வந்தடைந்தார். இதே காலத்தில் தான் எகிப்திய நாகரீகமும் வளர்ந்து வந்தது.

ஊர்-இல் கிட்டிய சிலை

மோரியா மலைமீது ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முற்படும் போது தேவன் அவரைத் தடுத்து நிறுத்தினார், அப்பொழுது ஆபிரகாம் புதர்களில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவை கண்டு அதனை தேவனுக்கு பலியிட்டார் (ஆதியாகமம் 22ஆம் அதிகாரம்). இதே மோரியா மலைமீது தான் சாலொமோன் தேவாலயத்தை கட்டினார் (2 நாளாகமம் 3:1). 1928-இல் ஊர்-கஸ்திமில் (ஊர்) நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு 2600-2400 காலத்தைச் சேர்ந்த ஆட்டுக் கடாவின் பொற்சிலை கிட்டியது. புதர்களுக்கிடையே காலூன்றியதை போல இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் தான் சுமேரியர்கள் பெருமளவான ஆடுகளை வீட்டுவளர்ப்புப் பிராணிகளாக்கி வந்தனர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

ஆபிரகாம் கானானை அடைந்த காலத்தில் அவருடைய சகோதரரின் மகனான லோத்து அவரை விட்டு பிரிந்து யோர்தான் நதி அருகில் அமைந்த சமபூமிக்கு சென்றார். இந்த சமபூமியின் ஐம்பட்டணங்களாக பைபிள் குறிப்பிடும் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம், சோவார் இன்றும் சர்ச்சைக்குரிய இடங்களாக உள்ளன. ஐந்தாவதான சோவார் அமைந்த இடம் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்மா, செபோயிம் பட்டணங்கள் விளங்கியதற்கான தடயங்கள் எப்லா கல்வெட்டுகளில் காணப்படுகின்றன, இருப்பினும் இவை அமைந்துள்ள இடங்கள் இன்றும் தேடல் நிலையிலேயே உள்ளன.

சோதோமிலும் கொமோராவிலும் பாவங்கள் பெருகின போது இறைவன் கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்க செய்து அப்பட்டணங்களை அழித்தார் எனவும் அதில் லோத்து குடும்பத்தார் மட்டுமே தப்பி பிழைத்ததாகவும் பைபிள் கூறுகிறது. பின்னிட்டு பாராமல் வெளியுமாறு விதிக்கப்பட்ட கட்டளையை மீறி லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆகிறாள். உப்புகடலை ஒட்டி இப்பட்டணங்கள் அமைந்திருந்ததாகவும் நீலக்கீல் மிகுந்த பகுதிகளாக விளங்கியதாகவும் பைபிளில் செய்திகள் உள்ளன (ஆதியாகமம் 14:1-3, 10). உப்புக்கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சிலவற்றில் கந்தகமும், சாம்பலும், நீலக்கீலும் படிந்திருக்கின்றன. கடற்கரையை ஒட்டி தூண் வடிவ உப்புக்கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலர் சோதோம் கொமோரா உப்புக்கடலால் சூழப்பட்டு மூழ்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அழிக்கப்பட்ட இப்பட்டணங்கள் அமைந்துள்ள இடங்கள் இன்றும் கண்டறியப்படவில்லை.

உப்புக்கடல் அருகே காணப்படும் தூண் வடிவம்

ஆதியாகமம் 21:32, 26:1,8, 14, 15, 18 ஆகிய வசனங்களில் பெலிஸ்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெலிஸ்தர்களின் மட்பாண்டங்கள் கப்தோரிலும், பெலிஸ்தாவிலும், எரிகோவிலும், பெத்சானிலும் கிடைத்துள்ளன. கானான், கப்தோர் மக்களுக்கிடையே தூதுவர்கள் இருந்தனர் என ஆத்சோரிலும், உகாரித்திலும் எடுக்கப்பட்ட மினோவர் மட்பாண்டங்கள்  கூறுகின்றன. கி.மு 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மரி கல்வெட்டுகளில் ஆத்சோரின் மன்னர் கப்தோருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பினார் என குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆபிரகாம் சாராள் இறந்த போது, எபிரோனிலுள்ள மக்பேலா என்னும் குகையை விலைக்கு வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தார். இக்குகையிலேயே ஆபிராகமும் அடக்கம் செய்யப்பட்டார்.ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோரும் மக்பேலாவில் அடக்கம் செய்யப்பட்டனர்.
ஆதியாகமம் 49:29-32 - " பின்னும் அவன் (யாக்கோபு) அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப் போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம் பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான் "
எபிரோன் மக்பேலா

ஆபிரகாமின் கல்லறை வாயில்

ஆபிரகாமின் கல்லறை - பிரேதம்
நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது.

சாராளின் கல்லறை வாயில்.
உள்ளே காணப்படுவது கல்லறை.

ஈசாக்கு - ரெபெக்காளின் கல்லறைகள்

யாக்கோபின் கல்லறை

லேயாளின் கல்லறை வாயில்.
உள்ளே காணப்படுவது லேயாளின் கல்லறை.

கி.மு முதல் நூற்றாண்டில் பேரரசர் ஏரோதால் மக்பேலா குகையை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன.  கி.பி 6ஆம் நூற்றாண்டில் பைசாண்டிய பேரரசால் மக்பேலாவில் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தை கி.பி-614-இல் பெர்சியர்கள் அழித்தனர். பின்னர், இஸ்லாமியர்களால் மக்பேலா மசூதியாக மாற்றப்பட்டது. சிலுவை போர்களின் போது கிறிஸ்தவர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தேவாலயமானது. இக்காலத்தில் முற்பிதாக்களின் உடற்கூறுகளும் எழும்புகளும் புதிய துணிகளால் போர்த்தப்பட்டு மீண்டும் குகையிலேயே வைக்கப்பட்டன என அலி, இபின் அத் அதிர், இபின் அல் குலானிஷி முதலிய இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். கி.பி 1188-இல் அரசர் சலாவுதீன்  மக்பேலாவை மீண்டும் மசூதியாக்கினார். எனினும் இவ்விடத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆராதனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். கி.பி-13ஆம் நூற்றாண்டில் மன்னர் மம்லுக் மசூதியை விரிவுப்படுத்தி முற்பிதாக்களுக்கும் அவர்களது மனைவிமார்களுக்கும் கல்லறைகளைக் கட்டினார். இதன்பின்பு,  1929ஆம் ஆண்டு வரை யூதர்கள் மக்பேலாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. 1967-இல் நிகழ்ந்த ஆறு நாட்கள் போரில் மக்பேலா யூதர்களால் கைப்பற்றப்பட்டு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் இவ்விடம் இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

யாக்கோபு  தன் இளைய மனைவி ராகாலை பெத்லகேமிற்கு போகின்ற வழியில் அடக்கம் செய்து கல்லறைத் தூணை நிறுத்தினார் (ஆதியாகமம் 35:19). ராகேலின் கல்லறையாக பெத்லகேமில் உள்ள பிலால்-பின்-ரபா மசூதியை கருதுகின்றனர். இது யூதர்களின் மூன்றாம் புனித ஸ்தலம்.

பிலால்-பின்-ரபா மசூதி

ராகேலின் கல்லறை வாயில்

ராகேலின் கல்லறை அருகே தொழும் யூதர்கள்

இவைத்தவிர இஸ்ரேலில் காண வேண்டிய புனித ஸ்தலங்கள் ஏராளம் உள்ளன. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கோடிக் கணக்கான  மக்கள் வருடந்தோரும் இப்பகுதிகளை நோக்கி வருகை தந்து இறைவனை தொழுகின்றனர். முற்பிதாக்களின் காலடித் தடங்கள் பதிந்த புண்ணிய பூமியாக இஸ்ரேல் விளங்கி வருகிறது...

"அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவு மட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின் மேல் வைக்கப்பட்டிருக்கும்" - உபாகமம் 11:12

வியாழன், 22 டிசம்பர், 2016

குரங்கிலிருந்து வந்தவனா மனிதன்? ( வேதாகம அறிவியல் - 01 )






மனிதனை தேவனே படைத்தார் என வேதாகமம் கூறுகின்றது.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.ஆதியாகமம்-2:7

ஆனால் விஞ்ஞானமோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்னம் பொய்யை கூறிவருகிறது.

மனிதக் குரங்கு என்று அழைக்கப்படும் குரங்குகினங்களுக்கும் மனிதனுக்கும் மற்ற விலங்கினங்களை விட சற்று அதிகமான உருவ ஒற்றுமை இருப்பதால் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பது சரியானதன்று. 

1.   ஜெர்மனியிலுள்ள நீண்டர் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சியின் போது 1856 இல் கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புக் கூடுகளை மனிதனுக்கும் குரங்கிற்கும் இடையேயான ஒரு விலங்கினுடையவை என்று கூறி உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கினர்.

குரங்கு போன்ற தோற்றம் தரக்கூடியதாக அந்த எலும்புக் கூட்டை மாற்றம் செய்யும் வண்ணமாக தோல், முடி ஆகியவற்றைக் கற்பனையாக சித்தரித்து நீண்டர்தால் பெயர் சூட்டினர்.

அப்படி  நீண்டர்தால் மனிதன் என்று அழைக்கப்பட்டவரகள் சாதரண மனிதர்கள்தான் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீண்டர்தால் மனிதனைப் பற்றி இன்றும் பாடசாலைகளில் கற்றுத்தருகின்றனர். இவ்வாறு உண்மையை திசை திருப்பவது சரியோ?

ஜாவா, சீனா ஆகிய இடங்களில் மனித எலும்புக்கூடுகள் அருகில் குரங்குகளின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்தனர். உடனடியாக தங்களுக்கு ஆதாரம் இருப்பதாக அவர்கள் கூறினர். ஆனால் அந்தக் குரங்குகளின் தலை எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தன. குரங்குகளின் மூளையை விரும்பி உண்ணும் வழக்கம் அங்கு இருந்ததால்தான் இவ்வாறு இருந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறு உண்ணும் வழக்கம் இந்நாடுகளில் இன்றும் உள்ளது.

மனிதனின் மட்டையோட்டுடன் குரங்கின் கீழ்தாடையில் மாற்றங்கள் செய்து பொருத்தி பில்ட்டவுன் மனிதன் என்று பொய்யாகக் கூறினார் சார்லஸ் டாசன் என்பவர். இவரது பொய் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இதுவரை குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட நிலையிலான விலங்கின் எலும்புக் கூடு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

2. குரங்கு மற்றும் ஏனைய விலங்குள் ஆகியவை குட்டிகளுக்கு கொடுக்கும் பாலையும் மனிதப் பாலையும் சோதித்து பார்த்ததில்  மனிதப்பாலுக்கு மிகவும் ஒத்திருப்பது கழுதையின் பால் என்பது தெரிகிறது. குரங்கின் பாலல்ல.

3.   இரத்தத்தில் இருக்கும் ஒற்றுமையைக் கவனித்தால் புலியின் இரத்தம் திமிங்கிலத்தின் இரத்தத்துடனும், கிளியின் இரத்தம் தீக்கோழியின் இரத்தத்துடனும் ஒத்திருக்கின்றன என்பது உண்மை. இவை ஒன்றிலிருந்து மற்றறொன்று வந்தது என்று கூறுவது சரியா?

மனித இரத்தத்தின் வீத எடைமானம் (Specitic Gravity) 1059.
பன்றிக்கு 1060.
முயலுக்கு 1060.
தவளைக்கு 1055-1056.
பாம்பிற்கு 1055.
குரங்கிற்கு 1054.
மனிதனுக்கும் குரங்கிற்கும் உள்ள உறவு எங்கே? பன்றியும் முயலுமல்லவா மனிதனின் அருகாமையில் உள்ளன. 

4. மனிதனுக்கு இருப்பது போன்று தந்தை என்ற பொறுப்பு குரங்கினங்களில் இல்லை. மற்ற விலங்குகளில் நரி (GoldenFox) என்ற சில விலங்குகளிலும் புறா, காகம் போன்ற பறவைகளிலும் உண்டு.

5.  மனிதனைப் போன்று இல்லாமல் குரங்குகள் சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இனச்சேர்க்கையுடையவை. 
  

6.     மனிதனின் மரபணுவிற்குக் (Gene) குரங்கின் மரபணுவிடம் இருக்கும் ஒற்றுமையானது, நாயின் மரபணுவுடனும் இருக்கின்றது என்று 2000-2001 இல் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் குரங்கின் ஒற்றுமையைப் பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்?
---------------------------------------------------------------------------------------------------------------------------------வாழ்வியல் விளக்க வேதாகமம்.

மண்ணான மனிதன்

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2.7)
எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல. மனுஷனுடைய மாம்சம் வேறே மிருகங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே (1கொரி 15.19)

மனிதனை கடவுள் மண்ணினாலேயா படைத்தைார் என்பதை அறிய ஆராய்ந்த போது இன்று மண்ணிலிருந்து கிடைக்கும் கனியவளங்களுடன் மனித உடலில் சம்பந்தம் வைத்திருக்கிறதை அறிய முடிகிறது.

உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்)(Brown) மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன்கார்பன்ஆக்சிஜன்கால்சியம்,தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை.பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.

1.            1.   துப்பாக்கியில் ஒரு முறை சுடுவதற்கு பயன்படுத்தும் அளவிலான கரி   மருந்து.
2.      ஏழு துண்டு சோப்பு செய்யப் போதுமான கொழுப்பு
3.      ஒரு பெரிய ஆணி செய்யப் போதுமான இரும்பு
4.      ஒரு நாயின் மேலுள்ள பேன்களைப் போக்க போதுமான கந்தகம்
5.      ஒரு சிறு கோழிக் கூட்டை வெள்ளையடிக்க போதுமான சுண்ணாம்பு
6.      வயிற்றுக் கோளாற்றைக் கண்டுபிடிப்பதற்கு போதுமான உப்பு
7.      2.200 தீக்குச்சிகளைச் செய்யப் போதுமான வெடிமருந்து.

இவ்வளவு கனிப்பொருள்கள் மனித உடலில் இருப்பதை பின்னாளில் சார்லஸ் H மேயர் எனும் மருத்துவ நிபுணர் விஞ்ஞான வாயிலாக கண்டுபிடித்தார்.

வேதாகமம் தேவனுடைய புத்தகம் என்பதை மனிதன் அறிந்து கொள்ளும்படி வேதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வைத்துவிட்டுப்போன உறவைப் பற்றி எண்ணிப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------உறவாடும் உண்மைகள்

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...???









இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனை த்தும் அழிந்துவிட்டன எனக்கொள்வோம். சற்று கற்பனைதான். பல்லா ண்டுகள் கழித்து வேற்று கிரகத்திலிருந்து மனிதர் கள் அல்லது மனிதர்களையொத்த ஜீவிகள் இந்த பூமிக்கு வருகின்றனர். அழிந்து புதைந்து கிடக்கும் பொருட்களையெல்லாம் பார்க்கின்றார்கள். அவைகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், கப்பல் விமானம் எல்லாவற்றையும் பார்க்கின்றான். இவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்று சிந்திக்கின்றான்.

பின் ஒரு கோட்பாட்டை உருவாக்குகின்றான். இப்படி 'ஆரம்பத்தில் வெறும் ரப்பர் மட்டும்தான் இருந்தது. அது தானாக பரிணாம வளர்ச்சியடைந்து டயராக மாறியது. இபபடி உருவான டயரால் யாதொரு பயனும் ஏற்படாது போக அத தானாக ஒரு சைக்கிளாக மாறியது. இந்த சைக்கிளை கொண்டு வேகமாக செல்ல முடியாது போக அதில் தானாக ஒரு என்ஜின் உருவாகி அது மோட்டார் சைக்கிளாக மாறியது அந்த மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பக்கவாட்டில் சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு வந்த காரணத்தினால் அந்த மோட்டார் சைக்கிள் தானாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவாக மாறியது அந்த ஆட்டோ ரிக்ஷாவால் வேகமாக செல்ல முடியாது போக அது ஒருகாராக மாறியது. கார் தன் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்ள அது பஸ்ஸாக மாறியது. பின் இன்னும் கொள்ளவை அதிகமாக்கிக் கொள்ள அது டபுள் டக்கர் பஸ்ஸாக மாறியது. பஸ் வேகமாக சென்று பல வகைகளில் உபயோகமாயிருந்தது. பின் அந்த பஸ் கடற்கரையை எத்திய போது மேற்கொண்டு செல்ல இயலாத நிலையில் பஸ்ஸின் மேற்பகுதி தனியே பிரிந்து அது ஆகாய விமானமாக மாறி பறந்தது. கீழ்பகுதியோ அது கப்பலாக மாறி தண்ணீரில் மிதந்தது. இவ்வாறு தான் வாகனங்கள் தோன்றின.

என்று அந்த வேற்று கிரகத்து ஜீவி விஞ்ஞானக் கோட்பாடு வகுத்தால் அந்த ஜீவியை புத்தி ஜீவி என்பீர்களா? பைத்தியக்காரன் என்பீர்களா?

வாயுக்களுக்கு, தூசுக்களுக்கு ஒன்றாக சேர்ந்த பொருள் தானாக வெடித்து பூமி உட்பட ஏனைய கிரகங்களும் தோன்றின. பூமி ஒருவித திரவத்ததைக் கக்கினது . இந்த திரவத்திலிருந்து ஆரம்பத்தில் மிக நுண்ணிய முதல் உயிரணு தானாக தோன்றியது. பின்னர் அதிலிருந்து ஏராளமான செல்களைக் கொண்ட உயிரணுக்கள் தோன்றின. அவைகளில் சில கடலிலிருந்து வெளிப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினங்களாக நிலத்தில் வாழ வந்தன. இன்னும் சில பறப்பனவாகின. ஊர்ந்து செல்லும் பிராணிகளிலிருந்து குட்டி போடும் பிராணிகள் உருவாயின. இத்தகைய பிராணிகளிலிருந்து தானாக ஒரு தனி இனம் தோன்றியது. அது தோற்றத்தில் குரங்கைப் போல் இருந்தது. அது மரத்தில் வாழ்வதை விட்டு விட்டு நிலத்தில் வாழ ஆரம்பித்தது. காலப்போக்கில் இவை நிமிர்ந்து நின்று கைகளை நடப்பதற்குப் பதிலாக கருவிகளோடு பரிமாறும் அனுபவத்தை சந்தர்ப்பவசத்தால் பெற்றுக் கொண்டது. நீண்ட நெடிய காலங்களுக்குப் பின்னர் அவை மனித வடிவம் பெற்றன. இந்நிலையில் அவை சிந்திக்கவும், பேசவும் கற்றுக் கொண்டன. பல வருடங்கள் கழித்தபிறகு இந்த குரங்கு குணங்கள் அதனிடமிருந்து அகன்றது. முழுமையான மனிதன் உருவானான்.

என்று கூறுபவர்களுக்குப் பெயர் புத்தி ஜீவி, அறிவியல் ஞானி.

இந்த கோட்பாட்டிற்கு சார்லஸ் டார்வினும் அவர் பக்தர்களும் எடுத்து வைக்கும் ஆதாரம் ஒரு சில உயிரினங்களின் (அதாவது மீன், பாம்பு, பல்லி, ஓணான், கீரி, நாய், குரங்கு. மனிதன் என்று சிலவற்றின் எலும்புகளை வரிசைப்படுத்தி வைத்து ஒன்றை அடுத்து மற்றொன்றின் தொடர்பை பார்த்தீர்களா? இது தான் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் என்றார்கள்.

பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்றால் இன்று வாழும் மனித குரங்குகளும், வாலில்லாத குரங்குகளம் ஏன் இதுவரை மனிதனாக மாறவில்லை. அவ்வாறு மாறுவதிலிருந்து தடுத்தது எது?

இந்த பரிணாம மாற்றம் நிகழ போதிய காலம் அவைகள் வாழ்ந்தே இருக்கின்றன. விஞ்ஞானியின் கால அளவு படி பலலட்சம் ஆண்டுகள் குரங்கு தலைமுறைக் குரங்காகவே வாழ்ந்து வருகின்றன. அவைகள் ஏன் இன்னும் அந்த பரிணாம மாற்றத்தை அடையவில்லை?

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனித இனத்தை அடைந்த பின் இன்னும் வேறு ஒரு வர்க்கமாக மனிதன் பரிணாம வளர்ச்சியடையாதது ஏன்?

வரலாறு அறிந்த காலத்திலிருந்து எங்காவது எந்த குரங்காவது மனிதனாக மாறியிருக்கிறதா? இல்லை மனிதனாவது பரிணாம வளர்ச்சியடைந்து வேறு இனமாக மாறியிருக்கிறானா?

சில உயிரினங்களை 50 வருடங்கள் வரை பாலூட்டி உணவூட்டிக் கவனமாக வளர்த்துப் பார்த்த பிறகும் அவற்றிலிருந்த எந்தப் புதிய இனமும் தோன்றக் காணோம். இந்த உயிரினங்களை 50 ஆண்டுகள் வளர்ப்பது என்பது 1000 மனிதத் தலைமுறைக்கு ஒப்பானதாகும். கழுதைக் காலம் கடந்தால் குதிரையாக. குதிரைக்காலம் கடந்தால் ஒட்டகமாகவே மாறியதை எவரும் கண்டதில்லை.

ஒர் உயிரினம் காலப்போக்கில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு உயிரினமாக மாறும் என்னும் பரிணாமக் கோட்பர்டடை நிருபிக்கும் விதமான ஆதாரம் ஒன்றைக் கூட நடைமுறை உலகில் எடுத்துக்காட்டியதில்லை.

மிருகங்களுக்கு உள்ளது போலவே மனிதனுக்கும் உடலுள்ளது. தின்பது, குடிப்பது, சுவாசிப்பது, மலஜலம் கழிப்பது, உடலுறவு கொள்வது போன்றவைகளில் இரு வர்க்கத்திற்குமிடையே வேறுபாடு இல்லை எனினும் ஒருசிலவகையில் அவைகள் மனிதர்களை விட மிகைத்தே காணப்படுகின்றன. இந்த பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக்கொள்ளாமல் இயல்பாகவே சில சிறப்புத் தன்மைகளுடன் பிறக்கும் ஜீவிகள் பல உண்டு.

தேனீக்களைப் பாருங்கள், விரிந்து கிடக்கும் பூவில் எந்த பூவில் அதிகம் தேனுள்ளது என்பதை அறிந்து அதை உறிஞ்சும் வல்லமை அதற்கு இருக்கிறது. எத்தகைய அறிவு  ஜீவி. மனிதனுக்கு கூட தேனிருக்கும் பூ எது? தேன் இல்லாத பூ எது? அதிக தேனுள்ளது எது? என்பதை அறிய முடியாது. ஆனால் அப்பூவை கடந்த செல்லும் தேனீக்களுக்கு அது தெரியும். தேனீக்கள் தம் சிறகுகளுக்கு இடையேயிருந்து ஒழுகக்கூடிய மெழுகை உபயோகித்து சமஅளவில் அறுகோண வடிவில் அறைகளுடன் கூடிய கூடு கட்டுகிறது. அதன் அறைகள் ஒன்றைவிட மற்றொன்றிற்கு எந்த வொரு மாற்றமுமில்லாது அளந்து கட்டியது போல் கட்டுகின்றது.

ஐரோப்பியக் காடுகளிலும், வட அமெரிக்கக் காடுகளிலும் காணப்படும் காட்டட என்ஜினியர் என்று அழைக்கப்படும் பீவரியைப் பாருங்கள் அவைகள் சராசரி ஒரு மீட்டர் நீளமும், 17 கிலோகிராம் எடையுமுடையவையாகும். அதிக கனமுடைய மரங்களை தன்னுடைய கூரான பற்களைக் கொண்டு வெட்டி முறித்து காட்டாற்றிலே தள்ளிவிட்டு தனக்கு வீடு கட்ட நாடிய இடத்திற்கு கொண்டு செல்கிறது. ஆற்றின் ஆழம் குறைந்த இடத்தில் கல்லும். தொழி மண்ணும் உபயோகித்து தேவையுடைய அளவு உயரமாக்கி மரக்கட்டைகளையும், தொழிமண்ணையும் கொண்ட தேங்காய் மூடி (சிரட்டை) வடிவில் வீடுகட்டி. அது உட்செல்லும் வாசலுக்கு, பூமிக்கு அடியிலே துளையிட்ட சுரங்கம் அமைத்துக்கொள்கிறது. அது போய் வருவது எல்லாம் ஆற்றுநீர் வழியாகத்தான். வீட்டினுள் காற்று போய்வருவத்றகாக மேல்பாகத்தில் சிறய துளையிட்டுக் கொள்கிறது. நவீன நாகரீக மனிதர்களின் ஏர்கண்டிஷன் வீடுகளைப் போன்ற வீடுகளை பீவரிகள் எவரிடம் சென்று கற்றுவராமல் சுயமாக கட்டிவருகின்றன.

ஆரல்  மீனின் அற்புதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அற்புதமாகும். ஐரோப்பிய கடலில் வசிக்கின்ற ஆரல்கள் தங்களுடைய முட்டையிடும் காலம் வந்ததும், பெர்மூடாயிலிருந்து சுமார் 4000 கிலோமிட்டர் நீந்தி ஸ்ஹாஸோ கடலில் வந்து - ஸர்ஹாஸோவில் சஞ்சாரமற்ற இடம் சென்று  இலட்சக் கணக்கில் முட்டையிட்டு விட்டு அங்கே படிகின்றன. இந்த முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு ஆரல்கள் தன் தாய் வந்த வழியாக ஐரோப்பிய சமுத்திரத்தில் தன் தாய் எங்கிருந்து புறப்பட்ட வந்ததோ  அங்கு சென்று  வசிக்கின்றது. யாரும் வழிகாட்டிக் கொடுக்காத முன்பொருமுறையேனும் செல்லாத வழிகள் வழியாக நீந்தி செல்ல குஞ்சி ஆரல்களால் எப்படி முடிந்தது.

ஆர்ட்டிக்கில் வசிக்கும் தேஷாடனப் பறவைகள் துருவ காலம் வந்தால் ஆர்ட்டிக்கிலிருந்த புறப்பட்டு 17 ஆயிரம் கிலோ  மீட்டர் பறந்து கோடை காலம் ஆகும் போது அண்டார்டிக் வந்து சேருகிறது. அங்கு சிலகாலம் தங்கிய பின்பு தாம் வந்த வழியே பறந்து சென்று குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்ட இடம் வந்து சேர்கிறது.

தேனீக்களுக்க ஒரே அளவிலான கூடு கட்டவும், தேனுடைய பூக்களை அறியவும், பீவரிகள் அழகிய ஏர்கண்டிஷன் வீடு கட்டவும், ஆரல்களுக்கு சமுத்திரத்தில் பயணிக்கவும், தேஷாடனப் பறவைகளுக்கு ஆகாயத்தில் வாழிகாட்டவும் எவரும் கற்றுக்கொடுக்கவில்லை. பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக் கொள்ளவும் இல்லை. இயல்பிலே அத்தன்மைகளைப் பெற்றே தோன்றுகின்றன.

இத்தகைய சிறப்புத் தன்மைகளுடன் கூடிய உயிரினங்களிலிருந்து தான் பரிணாம வளர்ச்சியில மனிதன் தோன்றினான் என்றால் இந்த உயிரி னங்களுக்கு இருக்கும் சிறப்புத் தன்மைகள் அனைத்தும் மனிதனுக்கும் இருக்க வேண்டும். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து ஏற்றம் பெற்றுள்ள மனிதனுக்கு தேனியைப் போல் பீவரியைப் போல் நன்றாக உறைவிடம் உண்டாக்கவும் கூடிய தன்மையும். இயல்பும் இருந்திருக்க வேண்டும். ஆரல் மீன்கள் போன் றும், தேஷாடனப் பறவைகள போன்றும முன்பின் தெரியாத இடத்திற்கு சுய மாக இயல்பாக செல்லும் தன்மை இருந்திருக்கக வேண்டும். ஆனால் பரிணா ம வளர்ச்சியில் வந்த மனிதன் இத்தகைய தன்மை களையெல்லாம் இழந்தது எப்படி என்பதற்கு திருப்தியான பதிலை பரிணாம வாதிகள் இதுவரை கூறிய தில்லை.

அடிப்படையில் மிகவும் குறைவான தன்மையுடைய தன்னுடைய உடலுக்கு பதிலாக அவனுக்கு கிடைத்தது. நரம்பு மண்டலத்தின் தலைமைக் கேந்திரமாக பெரியதும், நுட்பமுமான பிரச்சனைகளுடன் கூடிய மூளையாகும்' என்கிறார். பிரபல பரிணாமவாதி ஹோர்டன் சைல்ட் (Man Makes himself ) மூளை வளர்ந்த போது மற்ற தன்மைகளெல்லாம் அவனைவிட்டுப் போய்விட்டது என்று பரிணாமவாதிகள் கூறுவது ஒரு விசித்திர வாதமாகும். மனிதன் தன் தன்மைகளை இழந்ததற்கு எந்தவொரு Fossil ஆதாரமோ Embryology   ஆதாரமோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதில்லை.

உடலியல் தன்மைகளில் மிருகங்களை விட எவ்வளவோ பின்நிற்கும் மனிதன் - தன்னை விட எவ்வளவோ சக்தியுள்ள மிருகங்களை விட முன்னேறி செல்லும் வகையான தன்மைகளைப் பெற முடிந்தது அறிவால் ஆகும். இந்த அறிவு பரிணாம வளர்ச்சியில் எந்த கட்டத்தில் அவனுக்கு கிடைத்தது என்பதற்கும் தெளிவானப் பதில் இல்லை.

சகல வித சூழ்நிலைகளில் விதங்களில் பார்க்கும் விதத்திலான கண்களும், சகலவிதங்களிலும் சுழற்றி எதையும் செய்ய ஏதுவான கைகளும் பருமான மூளையும் தான் மனிதனை அறிவு ஜீவியாக ஆக்கியது' என்னும் நவீன பரிணாமவாதி ஸ்டீபன் ஜெய் கோல்டின் (Ever Sinc Darwin) வாதம் பூசிமொழுகும் வாதமே தவிர விஞ்ஞான அடிப்படை ஆதாரங்களுடன் கூடிய வாதமும் அல்ல. ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனமாக மனிதனாக எப்படி வந்தான் என்பதை தெளிவு பட இதுவரை எந்த பரிணாம வாதிகளும் கூறியதில்லை.

முயலைப் போன்று வேகமாக ஓடும் கால்கள் மனிதனுக்கு இல்லை. யானையைப் போல் பழு தூக்கும் கைகளும் அவனுக்கில்லை. எதிரிகளிடமிருந்து தன்மை தற் காத்துக் கொள்ள முள்ளம்பன்றிக்கிருப்பது போன்ற முட்களோ, ஆமைக்குள்ளது போன்ற ஒடுகளோ அவனக்கில்லை. துருவப்பிரதேசங்களில் குளிரிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கம்பளி ரோமங்களோ அவனுக்கில்லை. தேனீயைப் போன்ற கண்களோ வவ்வாலை போன்ற காதுகளோ நாயை போன்ற மோப்பசத்தியுடைய மூக்கோ, ஆகாயத்தில் பறப்பதற்குரிய இறக்கைகளோ, சமுத்திரத்தில் நீந்துவதற்குரிய துடுப்புகளோ ஒன்றும் அவனுக்கில்லை. இத்தகைய எந்தவொரு தன்மையுமில்லாமல் ஒன்றுமறியாதவனாகத்தான் இவ்வுலகிற்கு வருகின்றான் மனிதன்.

எந்தவொரு சிறப்புத்தன்மையையும் பெறாமல் ஒன்றுமறியாத நிலையில் பிறக்கும் மனிதன். இவ்வுயிரினங்களையெல்லாம் மிகைக்கும் வகையில் பல சாதனைகளை தன் அறிவு மூலம் சாதிக்கின்றான். முயலைத் தோற்கடிக்கும் வாகனத்தை கண்டுபிடிக்கிறான் பீவரியை விட அழகிய வீடுகளை கட்டுகிறான் கழுகை தோற்கடிக்கும் விமானங்களையும், மீனைத் தோற்கடிக்கும் கப்பல்களையும் கண்டுபிடிக்கிறான். ஆனால் இத்தகைய சாதனைகளை இயல்பிலேயே பெற்றவனாக பிறப்பதில்லை. ஒரு டாக்டரின் மகளையோ, ஒரு என்ஜீனியரின் மகளையோ காட்டிலே கொண்டுவிட்டால் காட்டுமிராண்டியாக வளருவானே தவிர டாக்டராக என்ஜீனியராகவோ ஆகமாட்டான்.

மனிதனுக்கு இறைவன் கொடுத்த அறிவே சுற்றுச் சூழ்நிலை ஆய்வில் விருத்தியடைந்து வளர்ச்சியடைகிறது. மரத்தோடு மரம் உரசிபற்றிக் கொண்ட நெருப்பைக் கண்டு பண்டைய மனிதன் மரக்கட்டையுடன் மரக்கட்டையை யுரசி நெருப்பை பெற்றுக் கொண்டான். அன்று அவன் மரத்தோடு மரம் உரசி நெருப்பை கண்டு பிடித்ததாலே தான் இன்று அணுவைப் பிளந்து அதிலும் நெருப்பை கொண்டு வர முடிந்தது . இவ்வுண்மையை கண்ணியத்துடன் ஏற்று, 'நாங்கள் முன்னோர்கள் முதுகில் ஏறி நின்று தான் உயர்ந்தவர்களானோம்' என்று கூறினார் பிரபல விஞ்ஞானி நியூட்டன்.

மனிதனை மிருகத்திடமிருந்தும் இதர வர்க்கங்களிலிருந்தும் வேறுபடுத்தி தனித் தன்மையுடையவனாக்கியது அவனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவே யாகும். அந்த பகுத்தறிவு இறைவனால் வழங்கப்பட்டது பரிணாமத்தால் வந்தது அல்ல.

அறிவு பரிணாம வளர்ச்சியில் கிடைத்தது என்றால் பீவரியை போல் வீடுகட்டவும், தேனீயைப் போல் கூடுகட்டவும், ஆரலைப் போல் வழியறியவுமான இயல்பான தன்மைகளை மனிதன் இழந்தது எப்படி???

மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன் என்றால் அவன் நாயைப் போல் மோப்பம் பிடிக்கவும். முயலைப் போல் ஒடவும், புலியைப்போல் பாயவும், குரங்கைப் போல் தாவவும் முடியாதது ஏன்???

பரிணாம வளர்ச்சி நிலையில் இயல்புகளிலும் வளர்ச்சியல்லவா ஏற்பட வேண்டும். இழப்புகள் ஏற்பட்டது ஏன்? எப்படி???

தேனீக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கூட கட்டியதோ - இப்போதும் அதுபோலவே கட்டுகின்றது. பீவரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எப்படி வீடு கட்டியதோ இப்போதும் அதுபோலவே கட்டுகின்றன. அவைகளில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஆனால் மனிதனோ கடந்த நூற்றாண்டை விட இந்நூற்றாண்டில் மிகைத்த முன்னேற்றம் பெற்று வருகிறான். வனாந்தரத்தில வாழ்ந்த மனிதன் - குகைகளை வீடாக்கினான். பின் தேவயுடைய இடத்தில் வீடுகளைக் கட்டினான். கூரை வீடு ஓட்டு வீடாகி பின் மாடி வீடாகி அது உயர்ந்து கொண்டே போகிறது. இனி வரும் காலத்தில் மனிதன் எத்தகைய வீடுகளை உருவாக்குவான் என்பதை இப்போது எவரும் உறுதிபட கூறிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக இயல்பிலே சில சிறப்புத்தன்மைகளைக் கொண்ட ஜந்துக்களால் எந்வொரு முன்னேற்றமும் பெற முடியாத போது எதுவுமே அறியாமல் பிறந்த மனிதன் அவைகளை மிகைக்கக் காரணமான அறிவை எந்தக் கட்டத்தில் பெற்றான்???

பெறுவதற்கு காரணமானது எது???

மனிதனால் மட்டும் பெற முடிந்தது எப்படி???

மற்ற ஜந்துக்கள் பெறாமல் போனதற்கு காரணமாக இருந்தது எது??

வெட்கம் எந்தவொரு உயிரினத்திற்கும் இல்லாத மனிதனுக்கு மட்டுமேயுள்ள சிறப்புத்தன்மையாகும். வெட்கத்தை மறைக்க உடையின் அவசியம் எப்போது ஏற்பட்டது என்று இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்  பரிணாம கோட்பாட்டில் மனிதன் எந்நிலையில் வெட்கமுடையவனானான்? அவன் மூதாதையர்களாக கருதும் ஜந்துக்கள் எவற்றிற்கும்; இதுவரையும் வெட்க உணர்வுகள் இல்லாதிருக்கும் போது மனிதனக்கு மட்டும் வெட்கம் வர காரணம் என்ன???

மிருகங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலச் சூழ்நிலையில் மட்டுமே உடலுறவு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மனிதனோ அதற்கென்று நேரம் காலம் இல்லாமல் விரும்பும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். மாறுபட்ட இத்தகைய நிலை பரிணாம மனிதனில் எந்த கட்டம் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?

மிருகங்கள் எவையெவைகளுடன் கூடி உறவு கொண்டாலும் அவைகளுக்கு பாலியல் ரீதியான நோய் எதுவும் தாக்காதிருக்க சின்பன்ஜி களின் வால் முறிந்ததால் உண்டானவன் என்று கூறும் மனிதன் மட்டும் விபச்சாரம் செய்தால் எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி பாலியல் நோய்கள் வரக் காரணம் என்ன???

-ஆக பரிணாம கோட்பாடு என்பது ஒரு விஷயத்தை விளக்குவதற்காக கற்பனையாக செய்து கொண்ட கணிப்பு. அனுமானமேயன்றி காலத்தின் சோதனைகள் கடந்து வந்த உண்மையல்ல. இன்னும் எத்தனையோ சோதனை களை அது கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சோதனைகளிலெல்லாம் அது நீரூபிக்கப்படும் போது தான் அது நீரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை அடைய முடியும். பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் உறுதி செய்யக்கூடிய உண்மையான ஆதாரங்களை விஞ்ஞானக் கருவி கொண்டு உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தத்துவங்களை ஏற்றுக் கொள்வதே பகுத்தறிவுப் பூர்வமானதாகும்.

'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்னும் கோட்பாடானது படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறார்  என்பதை மறுக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட ஒரு தத்துவமே தவிர நீரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட தத்துவம் அல்ல.

ஆக்கம் - அபூ ஆஸியா

திங்கள், 19 டிசம்பர், 2016


உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! - எகிப்திய கல்லறைக்குள் தமிழ் மன்னர்கள்..!!



இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள்.
கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம்.
தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.
எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் வேற்று சமூகம் ஒன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படியானதொரு அறிவு கிட்டியது என்றும், அது குமரிக்கண்டம் எனப்படும் லொமூரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்களே என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளார்கள்.
அதனை மேலும் வலுப்படுத்துகின்றார் அலெக்ஸ்சான்டர் கெந்தர்தேவ் எனும் தொல்பொருள் ஆய்வாளர். அவருடைய கூற்றின் படி எகிப்தியர்கள் வாழ்ந்த காலத்தில் தென் பகுதியில் இருந்து வேறு ஓர் சமூகம் அங்கு வந்து குடியேறி உள்ளது.
அந்த சமூகம் குமரிகண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமூரியாவில் இருந்து வந்த சமூகம் என்றும் கெந்தர்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எகிப்துக்கும் இந்தியாவிற்கும் கடல் வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்களை கண்டுபிடிக்க பட்டுள்ளது. இதன் படி எகிப்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல ப்ரெந்தர் ஸ்தோதியார் என்ற ஆய்வாளர் Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள். 1927ஆம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை சேர்ந்தவையுடன் ஒத்துப்போகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அடுத்து நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் எனும் மக்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என ஒக்ரான் Autran என்ற தொல் பொருள் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். (நைல் நதி என்பது நீல நதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து திரிபு படுத்தப்பட்டு வந்த ஓர் சொல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.)
இறந்தவர்களை புதைப்பதும் எரிப்பதும் ஒருவகையில் தமிழர் மரபே அப்படியான ஓர் வழக்க முறையில் உருவாக்கப்பட்டதே எகிப்திய மன்னர்களுக்காக கட்டப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறப்படுகின்றது.
இங்கு பெரிய அளவில் எழுப்பப்படும் அடக்கம் செய்யப்படும் இடமான சமாதியே பெரும் இடு (சுடுகாடு) பெருமிடு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் பிரமிடு ஆக மாறிப்போனது என்ற கருத்தையும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
அதேபோன்று Edward pokoke என்ற வரலாற்று ஆய்வாளர் Indian in Greece என்ற நூலின் ஊடாக சிந்து வெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் எனவும்..,
சிந்து வெளியில் இருந்து, பெர்சிய வளைகுடாவை கடந்து Oman Hadramont, Yeman கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிஸினியா போன்ற பகுதிகளுக்கு பரவிச் சென்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Heinrich Kari Brugsh என்பவர் தனது History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம், கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலை நாட்டினர் என்று கூறியுள்ளார்.
பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில் பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என Adolf Erkman என்ற ஆய்வாளர் தனது Life in ancient Egypt உன்ற நூலின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளை கருத்தை Bengsch Bey என்ற எகிப்து நாட்டு வரலாற்று ஆய்வாளரும் ஒத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
LIliane Hornbergar என்ற பிரான்ஸ் ஆய்வாளரும் அறிஞருமான ஒருவர் எகிப்தின் முதல் வம்ச மன்னன் சிந்து சமவெளி பகுதியிலிருந்து வந்த தமிழர் ஒருவரே என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான சான்றுகள் உலகம் இப்போது வியந்து கொண்டிருக்கும் எகிப்தியர்களின் அறிவியல் என்பது தமிழர்கள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்பதை தெளிவு படுத்துகின்றது.
குறிப்பாக மர்மங்கள் அனைத்திற்கும் காரணமாக தமிழர்களே இருந்து வருகின்றார்கள், அந்த வகையில் பிரமிட்டுக்குள்ளே உறங்குவது தமிழ் மன்னர்கள் என்றும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆக மொத்தம் உலகம் முழுவதும் தமிழரே தமது காலாச்சாரத்தை நிலைநாட்டி சிறப்பு பெற்றிருந்தான் என்றும் உறுதியாகின்றது. என்றாலும் கூட இன்று நிலையற்று சிதறிப்போய் உள்ளது தமிழர் நாகரீகம்.
எவ்வாறாயினும் தமிழரே மூத்த குடி என்பது அனைத்து ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதமாகும் அதனை பேணிக்காப்பது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்று..,

செவ்வாய், 13 டிசம்பர், 2016

பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:

பிற மொழிக்கு இணையான தமிழ்ச்சொல்:1

1. அதிகாரி - அலுவலர்
2. செக் - காசோலை
3. சக்சஸ் - வெற்றி
4. பீரோ - இழுப்பறை
5. லீவ்லெட்டர் - விடுமுறை கடிதம்
6. சிட்டி - நகரம்
7. டைப்பிஸ்ட - தட்டச்சர்
8. ப்ரீவ் கேஸ் - குறும்பெட்டி
9. அப்பாயின்ட் மென்ட் - பணிஅமர்த்தல்
10. ரூம் ரெண்ட் - குடிக்கூலி
11. மோட்டல் - பயணவழி உணவகம்
12. காலேஜ் - கல்லூரி
13. ஃபேன் - மின்விசிறி
14. பிரிண்டிங் பிரஸ் - அச்சகம்
15. ஆசீர்வாதம் - வாழ்த்து
16. ரெக்கார்ட் - ஆவணம்
17. ஆபிஸ் - அலுவலகம்
18. சுவிட்சு -பொத்தான்
19. மேஜிக் - செப்பிடுவித்தை
20. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
21. ஈசன் - இறைவன்
22. கவர் - மறை உறை
23. லாரி - சரக்குந்து
24. உத்தரவு - ஆணை
25. சேலான் - செலுத்துச்சீட்டு
26. எஸ்டிமேட் - மதிப்பீடு
27. கண்ட்ரி - நாடு
28. பர்னிச்சர் - அறைக்கலன்கள்
29. அலங்காரம் - ஒப்பனை
30. மீட்டிங் - கூட்டம்
31. ஏஜென்ட் - முகவர்
32. டிக்ஷ;னரி - அகராதி
33. லாண்டரி - வெளுப்பகம்
34. கேரண்டி - பொறுப்புறுதி
35. டிபன் - சிற்றுண்டி
36. கண்ட்ரோல் - கட்டுப்பாடு
37. குமாரன் - மகன்
38. டிசைன் - வடிவமைப்பு
39. தம்ளர் - குவளை
40. சாம்பியன் - வாகை சூடி
41. கம்பெனி - குழுமம்
42. ஸ்டேடியம் - விளையாட்டரங்கம்
43. வொர்க்ஷhப் - பணிமனை
44. ஆக்ஸிடென்ட் - நேர்ச்சி
45. இம்ப்ரூ - பெருக்கு
46. ஸ்பீக்கர் - பேசுபவர்
47. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையம்
48. சினிமா - திரைப்படம்
49. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் - பல்பொருள் அங்காடி
50. ஆடியோகேசட் - ஒலிப்பேழை
51. சட்ஜ்மெண்ட் - தீர்ப்பு
52. வோல்டு - உலகம்
53. ரயில் - தொடர்வண்டி
54. ஆங்கிலச் சொல் தமிழ்ச்சொல்
55. பாக்கி - நிலுவை
56. அசெம்ளி - சட்டசபை
57. ஃபுட் போர்டு - படிக்கட்டு
58. குஃவோடா - பங்கு
59. கலெக்டர் - சேகரிப்பவர்
60. போஸ்ட் ஆபிஸ் - அஞ்சல் நிலையம்
61. அஸ்ட்ரோநோமி - வானநூல்
62. ஆட்டோமொபைல் - தானியங்கி
63. தியேட்டர் - திரை அரங்கு
64. அட்லஸ் - நிலப்படத்தொகுப்பு
65. ஃபேக்நியூஸ் - பொய்ச்செய்தி
66. அட்லஸ் - நிலப்படச்சுவடி
67. ஆபத்து - இடர்
68. ஆயில் ஸ்டோர் - எண்ணெய்ப் பண்டகம்
69. ஃபிளாஷ; நியூஸ் - சிறப்புச் செய்தி
70. ஆயுசு - வாழ்நாள்
71. ப்ரொஜெக்டர் - படவீழ்த்தி
72. ஜனங்கள் - மக்கள்
73. அடாப்டர் - பொருத்தி
74. ஸ்கூல் - பள்ளி
75. டீ - தேநீர்
76. பேங்க் - வங்கி
77. அந்நியர் - அயலார்
78. பாஸ்போர்ட் - கடவுச்சீட்டு
79. கரஸ்பாண்டேன்ட் - தாளாளர்
80. அபூர்வம் - புதுமை
81. லைசன்ஸ் - உரிமம்
82. கேபிள் - கம்பிவடம்
83. ஓட்டல் - உணவகம்
84. டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் - தட்டெழுத்துப் பயிலகம்
85. பேக்கிங் சார்ஜ் - கட்டுமானத்தொகை
86. டெய்லி - அன்றாடம்
87. இன்டர்நெட் - இணையம்
88. ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
89. பிளாட்பாரம் - நடைபாதை
90. அட்மிஷன் - சேர்க்கை
91. டிசிப்ளின் - ஒழுக்கம்
92. ஜெராக்ஸ் - ஒளிப்படி
93. இலஞ்சம் - கையூட்டு
94. பாய்லர் - கொதிகலன்
95. டிக்கெட் - பயணச்சீட்டு
96. சயின்ஸ் - அறிவியல்
97. புரபோசல் - கருத்துரு
98. டிவி - தொலைக்காட்சி
99. ஏரோப்ளேன் - வானூர்தி
100. கம்ப்யூட்டர் - கணினி
101. தெர்மா மீட்டர் - வெப்பமானி
102. கம்பெனி - குழுமம்
103. சென்ட்ரல் கவர்ன்மென்ட் - நடுவன் அரசு
104. மதர்லேண்ட் - தாயகம்
105. விஞ்ஞானம் - அறிவியல்
106. சாவி - திறவுகோல்
107. ரேடியோ - வானொலி
108. ரிஜிஸ்டர் போஸ்ட் - பதிவு அஞ்சல்
109. உபயோகம் - பயன்
110. ஆட்டோகிராப் - வாழ்த்தொப்பம்
111. ரிப்பைரர் - பழுதுபார்ப்பவர்
112. ஸ்டேசனரி சாப் - எழுது பொருள் அங்காடி
113. புல்லட்டின் - சிறப்புச் செய்தி இதழ்
114. டைப்ரைட்டர் - தட்டச்சுப்பொறி
115. மெடிக்கல் ஷhப் - மருந்தகம்
116. கிரீடம் - மணிமுடி
117. கிரீன் ப்ரூஃ - திருத்தப்படாத அச்சுப்படி
118. இலாபம் - வருவாய்
119. பெல்ட் - அரைக்கச்சு
120. ஃபோலியோஎண் - இதழ் எண்
121. புரோநோட் - ஒப்புச்சீட்டு
122. ஸ்பெஷல் - தனி
123. ஸ்டேட் கவர்ன்மென்ட் - மாநில அரசு
124. ஐஸ்- கிரீம் - பனிக்குழைவு
125. பால்கனி - முகப்பு மாடம்
126. மெஸ் - உணவகம்
127. கிளாத் ஸ்டோர்ஸ் - துணியங்காடி
128. மார்க்கெட் - அங்காடி
129. கோட்டல் - உணவகம்
130. லே அவுட் - செய்தித்தாள் வடிவமைப்பு
131. டீப் போர் வெல் - ஆழ்துளைக் கிணறு
132. என்வெரான்மென்ட் - சுற்றுச்சூழல்
133. பல்பு - மின்குமிழ்
134. காகிதம் - தாள்
135. பிளைட் - விமானம்
136. பேரண்ட்ஸ் - பெற்றோர்
137. டீ பார்ட்டி - தேநீர் விருந்து
138. டெலஸ்கோப் - தொலைநோக்கி
139. எவர்சில்வர் - நிலைவெள்ளி
140. விசிட்டிங்கார்டு - காண்டிச்சீட்டு
141. ஹேர்கட்டிங் சலூன் - முடித்திருத்தகம்
142. கிரைண்டர் - அரவை இயந்திரம்
143. உஷhர் - விழிப்பு
144. நோட்புக் - குறிப்பேடு
145. பார்லிமென்ட் - நாடாளுமன்றம்
146. காபி பார் - குளம்பியகம்
147. டிமாண்ட் டிராப்ட் - வரைவோலை
148. டீ ஸ்டால் - தேநீர் அங்காடி
149. எடிட்டோரியல் - தலையங்கம்
150. புஷ;பம் - மலர்
151. ஆராதனை - வழிபாடு
152. மைக்ராஸ்கோப் - நுண்ணோக்கி
153. பைக் - விசையுந்து
154. இண்டஸ்ட்ரி - தொழிலகம்
155. ப்ரஷ; - தூரிகை
156. பர்ஸ்ட் கிளாஸ் - முதல் வகுப்பு
157. புனல் - வடிகுழலி
158. யுனிவர்சிட்டி - பல்கலைகழகம்
159. பயாலாஜி - உயிரியல்
160. ஸ்டேஷனரி ஷhப் - எழுதுபொருள் அங்காடி
161. அபிஷேகம் - நீராட்டு
162. கலெக்டர் - ஆட்சியர்
163. அதிபர் - தலைவர்
164. ஹெலிகாப்டர் - சுருள் வானூர்தி
165. சர்ஜரி - அறுவைச் சிகிச்சை
166. போலீஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
167. செக் - காசோலை
168. ஐடென்டிபிகேஷன் சர்டிபிகேட் - ஆளறி சான்றிதழ்
169. நாலெட்ஜ் - அறிவு
170. சாக்பீஸ - சுன்னக்கட்டி
171. ஜட்ஜ் - நீதிபதி
172. கவுன்சில் - மன்றம்
173. நிபுணர் - வல்லுநர்
174. ஐஸ்வாட்டர் - குளிர்நீர்
175. காஸ்ட்யூம் - உடை
176. பஸ் ஸ்டாப் - பேருந்து நிறுத்தம்
177. மைக் - ஒலிவாங்கி
178. ஒன் வே- ஒருவழிப்பாதை
179. கெஸ்ட் கவுஸ் - விருந்தகம்
180. ஏஜென்சி - முகவாண்மை
181. பைண்டிங் - கட்டமைப்பு
182. சைக்கிள் - மிதிவண்டி
183. இண்டர்வ்யூ - நேர்காணல்
184. நஷ;டம் - இழப்பு
185. பிரிசன் - சிறைச்சாலை
186. போனஸ் - மகிழ்வூதியம்
187. அங்கத்தினர் - உறுப்பினர்
188. உத்தியோகம் - பணி
189. பைல் - கோப்பு
190. ஆஸ்பத்திரி - மருத்துவமனை
191. வீடியோகேசட் - ஒளிப்பேழை
192. ரப்பர் - தேய்ப்பம்
193. டைரி - நாட்குறிப்பு
194. லைசென்ஸ் - உரிமம்
195. காம்பாக்ட் டிஸ்க் - வட்டத்தகடு
196. சிலிண்டர் - உருளை
197. உயில் - இறுதிமுறி
198. கிரீன் ரூம் - பாசறை
199. ஆர்டர் ஆஃப் நேச்சர் - இயற்கை ஒழுங்கு
200. ஐதிகம் - உலக வழக்கு
201. அஸ்தெடிக் - இயற்கை வனப்பு
202. ஜெராக்ஸ் - ஒளிப்படி
203. கிளாசிக்கல் லாங்குவேஜ் - உயர்தனிச் செம்மொழி
204. ராக்கெட் - ஏவுகணை
205. கெலிகாப்டர் - உலங்கு வானூர்தி
206. அகாதெமி - கழகம்
207. கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
208. பாஸ்ப்போர்ட் - கடவுச்சீட்டு
209. சூப்பர் - சிறப்பு
210. லிவ்வர் - கல்லீரல்
211. டெலிபோன் - தொலைபேசி
212. கரண்ட் - மின்சாரம்
213. ட்ராவலர்ஸ் பங்களா - பயணியர் மாளிகை
214. பிரிட்ஜ் - குளிர்சாதனப்பெட்டி
215. லேட் - காலம் கடந்து
216. ஜங்ஷன் - கூடல்
217. வாஷிங் மெஷின் - சலவை இயந்திரம்
218. அட்டெண்டன்ஸ் - வருகைப்பதிவு
219. ரோடு - சாலை
220. லைட் - விளக்கு
221. கவுன்சில் - குழு
222. செல்போன் - கைப்பேசி
223. புரோட்டோகால் - மரபுத் தகவு
224. கூல்ட்ரிங்க்ஸ் - குளிர்பானம்
225. ஜீப் - கரட்டுந்து
226. வெரிபிகேஷன் - சரிபார்த்தல்
227. உபசரித்தல் - விருந்தோம்பல்
228. பிளாஸ்டிக் - நெகிழி
229. கார் - மகிழுந்து
230. சேர் - நாற்காலி
231. கோர்ட் - மன்றம்
232. பிக்னிக் - சிற்றுலா
233. பிளே கிரவுண்ட் - விளையாட்டுத்திடல்
234. டெட்லைன் - குறித்தகாலம்
235. பேட்மிட்டன் - பூப்பந்து
236. ஆதவன் - ஞாயிறு
237. ஸ்நாக்ஸ் - சிற்றுணவு
238. குபேரன் - பெருஞ்செல்வன்
239. லெமினேஷன் - மென்தகடு
240. டாக்டர் - மருத்துவர்
241. பேக்கர் - ரொட்டி சுடுபவர்
242. டிஸ்க் - குறுந்தகடு
243. நம்பர் - எண்
244. பேனா - தூவல்
245. ரிவர் - நதி
246. பஸ் - பேருந்து
247. காண்ட்ரக்ட் - ஒப்பந்தம்
248. இருதயம் - நெஞ்சகம்
249. ஸ்டோர் -
பண்டகம்

பிற மொழிப்பெயர்கள்- தமிழ்ப் பெயர்கள் 2


1டிரேடரஸ்  - வணிக மையம்
2கார்ப்பரேஷன்  - நிறுவனம்
3ஏஜென்சி   -முகவாண்மை
4சென்டர்   -மையம், நிலையம்
5எம்போரியம்  - விற்பனையகம்
6ஸ்டோரஸ் - பண்டசாலை
7ஷாப்   -கடை, அங்காடி
8அண்கோ  - குழுமம்
9ஷோரூம்  - காட்சியகம், எழிலங்காடி
10ஜெனரல் ஸ்டோரஸ்  -பல்பொருள் அங்காடி
11டிராவல் ஏஜென்சி   -சுற்றுலா முகவாண்மையகம்
12டிராவலஸ்  - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13எலக்டிரிகலஸ்  - மின்பொருள் பண்டகசாலை
14ரிப்பேரிங் சென்டர்  - சீர்செய் நிலையம்
15ஒர்க் ஷாப்   -பட்டறை, பணிமனை
16ஜூவல்லரஸ்  -நகை மாளிகை, நகையகம்
17டிம்பரஸ்  - மரக்கடை
18பிரிண்டரஸ்  - அச்சகம்
19பவர் பிரிண்டரஸ்  - மின் அச்சகம்
20ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்
21லித்தோஸ்  - வண்ண அச்சகம்
22கூல் டிரிங்கஸ்  - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23ஸ்வீட் ஸ்டால் -  இனிப்பகம்
24காபி பார் -  குளம்பிக் கடை
25ஹோட்டல் -  உணவகம்
26டெய்லரஸ்  - தையலகம்
27டெக்ஸ்டைலஸ் - துணியகம்
28ரெடிமேடஸ்  - ஆயத்த ஆடையகம்
29சினிமா தியேட்டர்  - திரையகம்
30வீடியோ சென்டர்   - ஒளிநாடா மையம், விற்பனையகம்
31போட்டோ ஸ்டூடியோ   -புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32சிட் பண்ட் -  நிதியகம்
33பேங்க்   - வைப்பகம்
34லாண்டரி   - வெளுப்பகம்
35டிரை கிளீனரஸ்  -உலர் வெளுப்பகம்
36அக்ரோ சென்டர்    - வேளாண் நடுவம்
37அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி
38ஏர்-கண்டிஷனர்   - குளிர் பதனி, சீர்வளி
39ஆர்டஸ்  - கலையகம், கலைக்கூடம்
40ஆஸ்பெஸ்டரஸ்  - கல்நார்
41ஆடியோ சென்டர்   - ஒலியகம், ஒலிநாடா மையம்
42ஆட்டோ -  தானி
43ஆட்டோமொபைலஸ் -தானியங்கிகள், தானியங்கியகம்
44ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்
45பேக்கரி -  அடுமனை
46பேட்டரி சர்வீஸ்  - மின்கலப் பணியகம்
47பசார் -  கடைத்தெரு, அங்காடி
48பியூட்டி பார்லர்   - அழகு நிலையம், எழில் புனையகம்
49பீடா ஸ்டால்  - மடி வெற்றிலைக் கடை
50பெனிஃபிட் பண்ட்   - நலநிதி
51போர்டிங் லாட்ஜத்ங் -உண்டுறை விடுதி
52பாய்லர்  - கொதிகலன்
53பில்டரஸ்  - கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54கேபிள்   - கம்பிவடம், வடம்
55கேபஸ்  - வாடகை வண்டி
56கபே   - அருந்தகம், உணவகம்
57கேன் ஒர்கஸ்  - பிரம்புப் பணியகம்
58கேண்டீன்  - சிற்றுண்டிச்சாலை
59சிமெண்ட்  - பைஞ்சுதை
60கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்
61சிட்ஃபண்ட்   - சீட்டு நிதி
62கிளப்   -மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63கிளினிக்   - மருத்துவ விடுதி
64காபி ஹவுஸ்  - குளம்பியகம்
65கலர் லேப் -  வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66கம்பெனி   - குழுமம், நிறுவனம்
67காம்ப்ளகஸ்  - வளாகம்
68கம்ப்யூட்டர் சென்டர்   -கணிப்பொறி நடுவம்
69காங்கிரீட் ஒர்கஸ்   -திண்காரைப்பணி
70கார்ப்பரேஷன்   - கூட்டு நிறுவனம்
71கூரியர்   - துதஞ்சல்
72கட்பீஸ் சென்டர் -  வெட்டுத் துணியகம்
73சைக்கிள் -  மிதிவண்டி
74டிப்போ  - கிடங்கு, பணிமனை
75டிரஸ்மேக்கர்  - ஆடை ஆக்குநர்
76டிரை கிளீனரஸ்  - உலர் சலவையகம்
77எலக்ட்ரிகலஸ்  -மின்பொருளகம்
78எலக்ட்ரானிகஸ்  - மின்னணுப் பொருளகம்
79எம்போரியம்  - விற்பனையகம்
80எண்டர்பிரைசஸ் - முனைவகம்
81சைக்கிள் -ஸ்டோரஸ்மிதிவண்டியகம்
82பேக்டரி -  தொழிலகம்
83பேன்சி ஸ்டோர் -  புதுமைப் பொருளகம்
84பாஸ்ட் புட்   - விரை உணா
85பேகஸ் - தொலை எழுதி
86பைனானஸ்  - நிதியகம்
87பர்னிச்சர் மார்ட்  - அறைகலன் அங்காடி
88கார்மென்டஸ்  - உடைவகை
89ஹேர் டிரஸ்ஸர்  - முடி திருத்துபவர்
90ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை
91ஜூவல்லரி  - நகை மாளிகை
92லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்
93லாட்ஜ்  - தங்குமனை, தங்கும் விடுதி
94மார்க்கெட் -  சந்தை அங்காடி
95நர்சிங் ஹோம்   - நலம் பேணகம்
96பேஜர்  - விளிப்பான், அகவி
97பெயிண்டஸ்  - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98பேப்பர் ஸ்டோர்  - தாள்வகைப் பொருளகம்
99பாஸ் போர்ட் -  கடவுச்சீட்டு
100பார்சல் சர்வீஸ்  - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101பெட்ரோல் -  கன்னெய், எரிநெய்
102பார்மசி -  மருந்தகம்
103போட்டோ ஸ்டூடியோ - ஒளிபட நிலையம்
104பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி   -நெகிலி தொழிலகம்
105பிளம்பர்   குழாய்ப் -பணியாளர்
106பிளைவுடஸ்  - ஒட்டுப்பலகை
107பாலி கிளினிக் -  பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108பவர்லும்   - விசைத்தறி
109பவர் பிரஸ்  - மின் அச்சகம்
110பிரஸ், பிரிண்டரஸ்  - அச்சகம், அச்சுக்கலையகம்
111ரெஸ்டாரெண்ட்  - தாவளம், உணவகம்
112ரப்பர்   - தொய்வை
113சேல்ஸ் சென்டர்   - விற்பனை நிலையம்
114ஷாப்பிங் -காம்ப்ளக்ஸ்வணிக வளாகம்
115ஷோரூம்   - காட்சிக்கூடம்
116சில்க் அவுஸ்  - பட்டு மாளிகை
117சோடா பேக்டரி   -வளிரூர்த்தொழில், காலகம்
118ஸ்டேஷனரி -  மளிகை, எழுதுபொருள்
119சப்ளையரஸ்  - வங்குநர்,
120ஸ்டேஷனரி   - தோல் பதனீட்டகம்
121டிரேட்  - வணிகம்
122டிரேடரஸ்  - வணிகர்
123டிரேடிங் -கார்ப்பரேஷன்வணிகக் கூட்டிணையம்
124டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்
125டீ ஸ்டால்  - தேனீரகம்
126வீடியோ  - வாரொளியம், காணொளி
127ஒர்க் ஷாப் -  பட்டறை, பயிலரங்கு
128ஜெராகஸ்  - படிபெருக்கி, நகலகம்
129எக்ஸ்ரே  - ஊடுகதிர்


திங்கள், 12 டிசம்பர், 2016

நல்லகணவன் எப்படி இருக்கவேண்டும்?
முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க வேண்டும்
மனைவியுடன் சண்டை வரும்போது மனைவி வீட்டாரை இழுக்ககூடாது
மனைவியின் உடல் குறைகளை குத்திகாட்டி பேசக்கூடாது.
தரக்குறைவான வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.
மனைவியுடன் வெளியே போகும்போது சிடுமூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப்போங்கள்.
உங்கள் பெற்றோரிடம் மனைவி பற்றி பெருமையாக கூறவேண்டும்.
வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா... சாப்டியா... என விசாரிக்கனும்.
அவள் ஆசைப்படுவதை உணர்ந்து முடியுமானவரை வாங்கி தரனும்.
அடிக்கடி வெளியே கூட்டிச் செல்லவேண்டும்.
மனைவியின் சமையலை குறைகூறாமல் பக்குவமாக புரியவைக்கனும்.
முடியும்பொழுது நிங்க சமையல் சமையல் செய்து மனைவியை அசத்தனும்.
அடிக்கடி அன்பாக தோளில் தடவி பேசுங்கள்.
முடியும்பொழுதெல்லாம் சிறு சிறு தொகை பணம் கொடுத்து வையுங்கள்.
அடிகடி அவள் பிறந்த வீட்டிற்கு கூட்டிச்செல்லுங்கள்.
மனைவி உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் விடுமுறை எடுத்து அவளை பார்த்துக்கொள்ளுங்கள்.
அவளின் உடல் ஆரோக்கியத்தில் கவணம் எடுங்கள்.
வீட்டில் அவள் எடுக்கும் முடிவுகளை மறுக்காதீர்கள்... தவறாயின் புரியவையுங்கள்.
அடிக்கடி அவளின் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.
நீ எனக்கு கிடைத்தது என் அதிஸ்டம் என்று கூறுங்கள்.
உங்கள் வெளி விடயங்களை இரவில் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
அவளின் நீண்டகால விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வையுங்கள்.
மனைவியாக இருந்தாலும் ஒரு பெண்ணிற்கான மரியாதையை கொடுங்கள்.
அவளிற்கு பிடிக்காத விடயங்களை தவிருங்கள்.
முக்கியமாக திடீர் என நண்பர்களுடன் வந்து நிக்காதீர்கள்.
நன்றி

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...