புதன், 17 செப்டம்பர், 2025

 

ரோஜா பூந்தோட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி . உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்இளையராஜாகண்ணுக்குள் நிலவு

Roja Poonthottam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…

BGM

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

BGM

ஆண் : விழியசைவில் உன் இதழசைவில்…
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி…
பெண் : ஓஓ ஓஓஓ…

ஆண் : புதிய இசை ஒரு புதிய திசை…
புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி…
பெண் : ஓஓ ஓஓஓ…

பெண் : காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்…
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்…
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே…

பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

BGM

பெண் : உனை நினைத்து நான் விழித்திருந்தேன்…
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்…
ஆண் : ஓஓ ஓஓஓ…

பெண் : நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்…
பருவநிலை அதில் என் மலருடல் சிலிா்த்திருந்தேன்…
ஓஓ ஓஓஓ…

ஆண் : சூாியன் ஒரு கண்ணில்…
வெண்ணிலா மறு கண்ணில்…
சூாியன் ஒரு கண்ணில்…
வெண்ணிலா மறு கண்ணில்…
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்…

பெண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

ஆண் : ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே…
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே…
நம் காதல் கதையைக் கொஞ்சம்…
சொல் சொல் சொல் என்றதே…

ஆண் : ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்…
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்…

 

எங்கெங்கே எங்கெங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஆஷா போஸ்லே & ஹரிஹரன்தேவாநேருக்கு நேர்

Engengaey Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM

ஆண் : என் தூக்கத்தில் என் உதடுகள்…
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்…

பெண் : என் கால்களில் பொன் கொலுசுகள்…
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்…

ஆண் : பூப்போல இருந்த மனம் இன்று…
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே…
சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…

BGM

பெண் : என் வீதியில் உன் காலடி…
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்…

ஆண் : உன் ஆடையின் பொன் நுாலிலே…
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்…

பெண் : நான் உன்னை துரத்தியடிப்பதும்…
நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா…
முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா…

BGM

பெண் : எங்கெங்கே எங்கெங்கே எங்கே…
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே…
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ…
இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே…

பெண் : நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று…
தொடாதே நீ தொடாதே…

ஆண் : நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்…
செல்லாதே தள்ளிச் செல்லாதே…

ஆண் : ஓ என்னம்மா என்னம்மா…
உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா…

BGM


 

அவள் வருவாளா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & ஷாகுல் ஹமீத்தேவாநேருக்கு நேர்

Aval Varuvala Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…
என் பள்ளமான உள்ளம்…
வெள்ளமாக அவள் வருவாளா…

ஆண் : கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக…
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

BGM

ஆண் : கட்டழகைக் கண்டவுடன்…
கண்ணில் இல்லை உறக்கம்…
வெள்ளையணு சிவப்பணு…
ரெண்டும் சண்டை பிடிக்கும்…

ஆண் : காதலுக்கு இதுதான்…
பரம்பரைப் பழக்கம்…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

ஆண் : அஹா… திருடிச் சென்ற என்னை…
திருப்பித் தருவாளா…
தேடி வருவாளா…

ஆண் : அட ஆணைவிட பெண்ணுக்கே…
உணர்ச்சிகள் அதிகம்… ஆஆ…
வருவாளே… அவள் வருவாளே…

ஆண் : அவள் ஓரப் பார்வை…
என் உயிரை உறிஞ்சியதை…
அறிவாளா… அறிவாளா…

BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…

BGM

ஆண் : ஏழு பத்து மணி வரை…
இல்லை இந்த மயக்கம்…
இதயத்தில் வெடி ஒன்று…
விட்டு விட்டு வெடிக்கும்…

ஆண் : போகப்போக இன்னும் பார்…
புயல் வந்து அடிக்கும்…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…

ஆண் : ஓஹோ… அவளை ரசித்த பின்னே…
நிலவு இனிக்கவில்லை…
மலர்கள் பிடிக்கவில்லை…

ஆண் : ஏ… கண்டு கேட்டு உண்டுயிர்த்து…
உற்றறியும் ஐம்புலனும்…
பெண்ணில் இருக்கு…
அந்த பெண்ணில் இருக்கு…

ஆண் : இந்த பூமி மீது வந்து…
நானும் பிறந்ததற்கு…
பொருளிருக்கு பொருளிருக்கு…

BGM

ஆண் : அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…
அவள் வருவாளா…

ஆண் : என் உடைந்துபோன நெஞ்சை…
ஒட்டவைக்க அவள் வருவாளா…
என் பள்ளமான உள்ளம்…
வெள்ளமாக அவள் வருவாளா…

ஆண் : கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக…
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க…

குழு : ஸுமுத்தாய் செல்லும்…
பிளாப்பி டிஸ்க் அவள்…
நெஞ்சை அள்ளும்…
டால்பி சவுண்ட் அவள்…


 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. ரவிசங்கர்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Rosappu Chinna Rosappu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…

BGM

ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு…
மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன்…
உசுருக்குள் கோயில் கட்டி…
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்…

ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்…
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்…
பாத மேல பூத்திருப்பேன்…
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

BGM

ஆண் : கண்ணாடி பார்க்கையில…
அங்க முன்னாடி உன் முகந்தான்…
கண்ணே நீ போகையில…
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்…

ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா…
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்…
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ…
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ…
காத்தில் ஆடும் தனியாக…
என் பாட்டு மட்டும் துணையாக…

 

ஒத்த ரூவா தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Otha Ruba Tharen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்…
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்…
நீ ஒத்துக்கிட்டு வாடி…
நாம ஓட பக்கம் போவோம்…

BGM

பெண் : ஒத்த ரூவாயும் வேணா…
உன் ஒனப்பத் தட்டும் வேணா…
ஒத்துக்கிற மாட்டேன்…
நீ ஒதுங்கி நில்லு மாமோய்…

BGM

ஆண் : ஏய்… பத்து ரூவாயும் தாரேன்…
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்…
பச்சக் கிளி வாடி…
மெல்ல படப்பு பக்கம் போவோம்…

BGM

பெண் : ஏய்… பத்து ரூவாயும் வேணா…
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா…
பசப்பி நிக்கிற மாமா…
என்ன உசுப்பி விட வேணா…

BGM

ஆண் : நா மச்சு வீடும் தாரேன்…
பஞ்சு மெத்த போட்டு தாரேன்…
மத்தியான நேரம் வாடி…
மாந்தோப்புக்கு போவோம்…

BGM

பெண் : அட மச்சு வீடும் வேணாம்…
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்…
மல்லுக்கு நிக்கிற மாமா…
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்…

BGM

ஆண் : ஹே… நஞ்சை புஞ்சசையும் தாரேன்…
நாலு தோட்டம் எழுதி தாரேன்…
தண்ணிக்கு போறது போல…
கண்ணே கொளத்து பக்கம் வாடி…

BGM

பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்…
நாலு தோட்டம் தொறவும் வேணாம்…
கணக்கு பண்ணுற மாமா…
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏய்… சொத்து பூரா தாரேன்…
சாவிக் கொத்தும் கையில தாரேன்…
பத்தர மணிக்கு மேலே…
நீ வெத்தல காட்டுக்கு வாடி…

பெண் : ஓன் சொத்து சொகம் வேணா…
என் புத்தி கெட்ட மாமா…
மஞ்சத் தாலி போதும்…
ஓம் மடியில நான் வாரேன்…

 

உன் உதட்டோர சிவப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & அனுராதா ஸ்ரீராம்தேவாபாஞ்சாலங்குறிச்சி

Un Uthattora Sivappe Song Lyrics in Tamil


ஆண் : தன நானா நானே நா நா…
தன நானா நானே நனனானே நா நா…

BGM

ஆண் : உன் உதட்டோர சிவப்பே…
அந்த மருதாணி கடனா கேட்கும்…
கடனா கேட்கும்…

ஆண் : நீ சிரிச்சாலே சில நேரம்…
அந்த நிலவு வந்து உளவு பார்க்கும்…
உளவு பார்க்கும்…

BGM

ஆண் : என் செவ்வாழை தண்டே…
என் செவ்வாழை தண்டே சிறு காட்டு வண்டே…
உன்ன நெனச்சு தான் எச பாட்டு…
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு…

BGM

பெண் : ஏன் மம்முத…
அம்புக்கு இன்னும் தாமசம்… ஆஆ…

ஆண் : அடியே அம்மணி…
வில்லு இல்ல இப்போ கை வசம்… ஆ…

பெண் : ஏன் மல்லு வேட்டி மாமா…
மனசிருந்தா மார்க்கம் இருக்குது…

ஆண் : என்னை பொசுக்குன்னு கவுக்க…
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது…

BGM

பெண் : முருக மலை காட்டுக்குள்ள…
விறகு எடுக்கும் வேலையில…
தூரத்துல நின்னவரே…
தூக்கி விட்டால் ஆகாதா…

BGM

ஆண் : பட்ட விறக தூக்கிவிட்டா…
கட்ட விரலு பட்டுபுட்டா…
விறகில்லாம தீ புடிக்கும்…
வெட்கம் கெட்டு போகாதா…

பெண் : நீ தொடுவதா தொட்டுக்கோ…
சொந்தத்துல வரைமுறை இருக்கா…

ஆண் : நீ பொம்பளதானே…
உனக்கு அது நியாபகம் இருக்கா…

பெண் : உன் நெனப்புதான்…
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது… ஆஆ…

ஆண் : அட உன் கிறுக்குல…
எனக்கு இந்த பூமி சுத்துது…

BGM

ஆண் : சிங்கம் புலி கரடி கண்டா…
சேர்த்தடிக்க கை துடிக்கும்…
பொட்டு கன்னி உன்ன கண்டா…
புலி கூட தொட நடுங்கும்…

BGM

பெண் : உம்ம நெனச்சு பூசையில…
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்…
நீ குளிச்ச ஓடையில…
நான் குளிச்சா பூ மணக்கும்…

ஆண் : ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே…
என்னை ஏன் தூக்கி சுமக்குற…

பெண் : என் மனசுக்குள் புகுந்து…
ஏன் மச்சான் இறங்க மறுக்குற…

ஆண் : அடி என் நெஞ்சிலே…
ஏண்டியம்மா வத்தி வைக்குற…

பெண் : உன் ஆசைய…
எதுக்கு இன்னும் பொத்தி வைக்குற… ஆஆ…

BGM

 

எனைக் காணவில்லையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஓ.எஸ். அருண் & ரஃபிஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Ennai Kaanavillaiye Song Lyrics in Tamil


ஆண் : அன்பே… அன்பே…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM

ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்…
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்…
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்…
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்…

ஆண் : நான் என்று சொன்னாலே…
நான் அல்ல நீதான்…
நீ இன்றி வாழ்ந்தாலே…
நீர்கூடத் தீதான்…
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

BGM

ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்…
நீ என்னை நீங்கிச் சென்றாலே…
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்…
நீ எந்தன் பக்கம் நின்றாலே…

ஆண் : மெய்யாக நீ என்னை…
விரும்பாத போதும்…
பொய் ஒன்று சொல் கண்ணே…
என் ஜீவன் வாழும்…
நிஜம் உந்தன் காதலென்றால்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா…
என் நிழலும் நீயெனப் புரியாதா…
உடல் நிழலைச் சேரவே முடியாதா…
அன்பே… அன்பே…

ஆண் : நடை போடும் பூங்காற்றே…
பூங்காற்றே…

ஆண் : வா வா…

குழு (ஆண்கள்) : என் வாசல்தான்…

ஆண் : வந்தால்…

குழு (ஆண்கள்) : வாழ்வேனே நான்…

ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு…
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு…
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு…
அன்பே…

BGM

 

கல்லூரி சாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ.ஆர்.ரகுமான், ஹரிஹரன் & அஸ்லம் முஸ்தபாஏ.ஆர்.ரகுமான்காதல் தேசம்

Kalloori Salai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
இன்பத்தை கருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்…

ஆண் : விண்ணவர்கும் மண்ணவர்க்கும்…
விலையற்ற செல்வம் பெண்…
விலையற்ற செல்வம் பெண்…

ஆண் : ஹேய்… பசியை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவலை மறந்தோம் பெண்ணை கண்டு…
கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு… ஹோய்…

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…
க க கல்லூரி சாலை…
கல்லூரி சாலை…

BGM

ஆண் : க க க கல்லூரி சாலை… ஹேய்…

BGM

ஆண் : ம்ம்… காலை முதல் மாலை வரை…
சாலை எங்கும் காதல் மழை…
காஷ்மீர் ரோஜா தோட்டம்…
கேட்வாக் இங்கே காட்டும்…
என்னாளும் பேஷன் ஷோ…
கல்லூரி சாலை…

BGM

ஆண் : கண்கள் சிலிகான் கிராபிக்ஸ்…
கேள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராபிக்…
வி சேனெல் சாய்ஸ் இல்…
உன் டால்பி வாய்ஸ் இல்…

ஆண் : லைட்டெனிங் கண்ணங்கள் லேசெர்…
எந்தன் லவ் மேட்டெர் சொல்லாத பேஜர்…
நான் காதல் கம்ப்யூட்டர்…
நீதானே சாப்ட்வேர்…

BGM

ஆண் : செல்லுலார் போனை போல நீங்கள் இருந்தால்…
பாகி பேன்ட் பாக்கெட் குள்ள…
நாங்கள் வைத்துக்கொள்வோம்…

ஆண் : காண்டாக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்…
கண்ணுக்குள் காம்பக்ட் ஆக…
நாங்கள் வைத்துகொள்வோம்…

ஆண் : அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேஷன்…
முன்னேறலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்…
கல்லூரி சாலை எங்கும் காதல் தொழிர்சாலைதானே…

BGM

ஆண் : டேடிங்காக லேடீஸ் காலேஜ்…
கேட்டினில் காத்திருப்போம்…
ஓகே என்றால் சான் ஃப்ரான்சிஸ்கோ…
டிஸ்கோ போய் வருவோம்…

ஆண் : பாய்ஸ் அண்ட் கேள்ஸ்…
ராக் அண்ட் ரோல் ஆடியே…
கொண்டாடும் சாலை இன்ப சாலை…
எவரிடே லவ் சீசன் நியூ பேஷன்…
நாம் வாழும் தேசம் காதல் தேசம்தான்…

BGM

ஆண் : க க க க க கல்லூரி சாலை…
க கல்லூரி சாலை…

BGM

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...