புதன், 17 செப்டம்பர், 2025

 

ஒத்த ரூவா தாரேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Otha Ruba Tharen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்த ரூவாயும் தாரேன்…
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்…
நீ ஒத்துக்கிட்டு வாடி…
நாம ஓட பக்கம் போவோம்…

BGM

பெண் : ஒத்த ரூவாயும் வேணா…
உன் ஒனப்பத் தட்டும் வேணா…
ஒத்துக்கிற மாட்டேன்…
நீ ஒதுங்கி நில்லு மாமோய்…

BGM

ஆண் : ஏய்… பத்து ரூவாயும் தாரேன்…
ஒரு பதிக்கஞ்சங்கிலி தாரேன்…
பச்சக் கிளி வாடி…
மெல்ல படப்பு பக்கம் போவோம்…

BGM

பெண் : ஏய்… பத்து ரூவாயும் வேணா…
உன் பதிக்கஞ்சங்கிலி வேணா…
பசப்பி நிக்கிற மாமா…
என்ன உசுப்பி விட வேணா…

BGM

ஆண் : நா மச்சு வீடும் தாரேன்…
பஞ்சு மெத்த போட்டு தாரேன்…
மத்தியான நேரம் வாடி…
மாந்தோப்புக்கு போவோம்…

BGM

பெண் : அட மச்சு வீடும் வேணாம்…
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்…
மல்லுக்கு நிக்கிற மாமா…
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்…

BGM

ஆண் : ஹே… நஞ்சை புஞ்சசையும் தாரேன்…
நாலு தோட்டம் எழுதி தாரேன்…
தண்ணிக்கு போறது போல…
கண்ணே கொளத்து பக்கம் வாடி…

BGM

பெண் : உன் நஞ்சை புஞ்சையும் வேணாம்…
நாலு தோட்டம் தொறவும் வேணாம்…
கணக்கு பண்ணுற மாமா…
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏய்… சொத்து பூரா தாரேன்…
சாவிக் கொத்தும் கையில தாரேன்…
பத்தர மணிக்கு மேலே…
நீ வெத்தல காட்டுக்கு வாடி…

பெண் : ஓன் சொத்து சொகம் வேணா…
என் புத்தி கெட்ட மாமா…
மஞ்சத் தாலி போதும்…
ஓம் மடியில நான் வாரேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...