திங்கள், 1 செப்டம்பர், 2025

 

கிக்கு ஏறுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & ஃபெபி மணிஏ.ஆர்.ரகுமான்படையப்பா

Kikku Aerudae Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

ஆண் : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

BGM

ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய்…
வைரத்தை பூட்டி வைத்தாய்…
உயிரை பூட்ட ஏது பூட்டு…

ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர்…
தவிர இங்கே சுகமாய்…
இருப்பவர் யார் காட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : ஜீவன் இருக்கும் மட்டும்…
வாழ்க்கை நமது மட்டும்…
இது தான் ஞான சித்தர் பாட்டு…

ஆண் : இந்த பூமி சமம் நமக்கு…
நம் தெருவுக்குள் மத சண்டை…
ஜாதி சண்டை வம்பெதுக்கு…

ஆண் : ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

BGM

குழு : சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…
சஜ்னாரே சஜ்னாரே…

BGM

ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும்…
தந்தையை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும்…
நிறத்தை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை…
குழு : இல்லை…

ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும்…
இறப்பை தேர்ந்தெடுக்கும்…
உரிமை உன்னிடத்தில் இல்லை… இல்லை…

ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே…
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில்…
உண்டு அதை வென்று எடு…

குழு : ஓஓ ஓஓ…
ஆண் : கிக்கு ஏறுதே…
பெண் : ஓஓ ஓஓ…
ஆண் : வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…

குழு : வெறும் கம்பங்களி…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…
அட தங்கபஸ்பம்…
தின்னவனும் மண்ணுக்குள்ளே…

ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான்…
நாம் பிறக்கையில் கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…

ஆண் : கையில் என்ன…
கொண்டு வந்தோம் கொண்டு செல்ல…
கையில் என்ன கொண்டு வந்தோம்…
கொண்டு செல்ல…
கொண்டு செல்ல…
ஓஓ ஓஓ… ஓஓ ஓஓ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  10 வகையான மேங்கோ லஸ்ஸி. .. 1. சாதாரண மேங்கோ லஸ்ஸி பொருட்கள்: பக்குவமான மாம்பழம் – 2 தயிர் – 1 கப் பால் – ½ கப் சர்க்கரை – 3 ஸ்பூன் ஏலக்கா...