வியாழன், 29 ஜனவரி, 2026

 

நீ ஒரு காதல் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாநாயகன்

Nee Oru Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
நீ ஒரு காதல் சங்கீதம்…

BGM

பெண் : வானம்பாடி பறவைகள் ரெண்டு…
ஊர்வலம் எங்கோ போகிறது…

ஆண் : காதல் காதல் எனுமொரு கீதம்…
பாடிடும் ஓசை கேட்கிறது…

பெண் : இசை மழை எங்கும்…
இசை மழை எங்கும் பொழிகிறது…
எங்களின் ஜீவன் நனைகிறது…

ஆண் : கடலலை யாவும் இசை மகள் மீட்டும்…
அழகிய வீணை சுரஸ்தானம்…
இரவும் பகலும் ரசித்திருப்போம்…

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…

BGM

ஆண் : பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்…
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்…

பெண் : தேனை ஊற்றும் நிலவினில் கூட…
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்…

ஆண் : கடற்கரைக் காற்றே…
கடற்கரைக் காற்றே வழியை விடு…
தேவதை வந்தாள் என்னோடு…

பெண் : மணலை யாவும் இருவரின் பாதம்…
நடந்ததைக் காற்றே மறைக்காதே…
தினமும் பயணம் தொடரட்டுமே…

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…
ஆண் : வாய் மொழி சொன்னால் தெய்வீகம்…
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...