வியாழன், 29 ஜனவரி, 2026

 

எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சின்ன மணிக்குயிலே பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் எஸ். பி. பாலசுப்ரமணியம் இளையராஜா அம்மன் கோவில் கிழக்காலே ...