வெள்ளி, 23 மே, 2025

அன்பே அன்பே நீ என் பிள்ளை

 பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…

தேகம் மட்டும் காதல் இல்லை…
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…
பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…

BGM

பெண் : கண்ணா என் கூந்தலில் சூடும் பொன் பூக்களும்…
உன்னை உன்னை அழைக்க…

ஆண் : கண்ணே உன் கைவளை மீட்டும் சங்கீதங்கள்…
என்னை என்னை உரைக்க…

பெண் : கண்களைத் திறந்து கொண்டு…
நான் கனவுகள் காணுகிறேன்…

ஆண் : கண்களை மூடிக்கொண்டு…
நான் காட்சிகள் தேடுகிறேன்…

பெண் : உன் பொன் விரல் தொடுகையிலே…
நான் பூவாய் மாறுகிறேன்…

ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் என் ஜீவன் உன்னைச் சேரும்…

பெண் : அன்பே அன்பே நீ என் பிள்ளை…
தேகம் மட்டும் காதல் இல்லை…

BGM

ஆண் : யாரும் சொல்லாமலும் ஓசை இல்லாமலும்…
தீயும் பஞ்சும் நெருங்க…

பெண் : யாரைப் பெண் என்பது யாரை ஆண் என்பது…
ஒன்றில் ஒன்று அடங்க…

ஆண் : உச்சியில் தேன் விழுந்து…
என் உயிருக்குள் இனிக்குதடி…

பெண் : மண்ணகம் மறந்துவிட்டேன்…
என்னை மாற்றுங்கள் பழையபடி…

ஆண் : உன் வாசத்தை சுவாசிக்கிறேன்…
என் ஆயுள் நீளும்படி…

பெண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

ஆண் : பூமியில் நாம் வாழும் காலம் தோறும்…
உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...