வெள்ளி, 30 மே, 2025

 விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

படம்: புதையல்

இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: Cs ஜெயராமன், p சுசீலா

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
இசை அமுதே..
(விண்ணோடும்..)
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுப்போல்
ஓடோடி வந்த சொர்க போகமே
ஓடோடி வந்த சொர்க போகமே
காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதை ஊற்றும் யோகமே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
விளையாடி இசை பாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
(விண்ணோடும்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...