நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே....
திரைப்படம்: கண்ணில் தெரியும் கதைகள்இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன், வாணிஜெயராம் & ஜிக்கி
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா, ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணாண சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நீரு நெலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்போ வெட்டவெளி ஆயாச்சு
நித்தம் நித்தம் தொட்டாயே, நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்பவரும் பூவாசம்
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா….
நான் உன்ன நெனச்சேன், நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
அப்போ வந்து வாங்கித்தந்தே பூச்சேலை
நீ எப்போ வந்து போடப்போற பூமாலே
அம்மஞ் சிலை இங்கேதான்
ஆடித்தேரு அங்கேதான்
இருந்தா கோயில் குளம் ஏனய்யா
செல்லையா என்னய்யா…. சொல்லய்யா….
நான் உன்ன நெனச்சேன்…நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
மாடு மனை எல்லாம் உண்டு என்னோட… என்
நெஞ்ச மட்டும் போக விட்டேன் உன்னோட…
உன்னத் தொட்டு நான் வாறேன்
என்னவிட்டு ஏம்போறே
நிழல்போல் கூடவந்தா ஆகாதோ….
செல்லையா… என்னய்யா… சொல்லய்யா…
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
உன்னாலே நெஞ்சு புண்ணாச்சு
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலதானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே
அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே
தன்னாலே…. நெஞ்சு ஒண்ணாச்சு….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக