வெள்ளி, 30 மே, 2025

 தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து....


படம் :மீனவ நண்பன்.
பாடியவர்கள்: வாணிஜெயராமன்,யேசுதாஸ்

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

பெண் :தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....

தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....


சரணம் 1 :

பெண் :
| தா ; ; ; | ; , நீ தா க | தா ; ; ; | ; ; தா ஸா ரி

| ஸா ; ; நி நீ | ; , தா கா த | பா

ஆண் : .. ஓ....
முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
செண்டு சதிராடினால் அந்த இடைதாங்குமா

பெண் : இந்த இடைதாங்கவே கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர்மஞ்சம் அழைக்கின்றது
மலர்ந்து - கனிந்து - சிரித்து - குலுங்கும் - கனியாகவோ....

பின்னணி இசை2:

சரணம் 2 :

பெண் :எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனைக் காண்கிறேன்
உந்தன் நிழல்போலவே வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் : இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காவே
சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க.. இனிக்க... கொடுத்து ... மயங்கும்
முத்தாரமே...

பெண் : ஓ...ஓ...ஓ..ஓ

ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ...
நீ மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...