நடிகனின் காதலி நாடகம் ஏனடி.....
SONG: nadiganin kaadhali
FILM : thaayillaamal naanillai
SINGER : SPB
MD : Shankar Ganesh
LYRICS : Kannadasan
கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும்
காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய்
உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி
என்னிடம் நாடகமா...நானே நடிகனடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலின் நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ
கொழு கொம்பைக் கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ
ஹேஹே...மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது
சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ
ஒரு மயக்கம் வரவழைக்கும் இளம் குமரன் நானம்மா
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள்
நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள்
பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான்
அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ
உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி
சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி
நடிகனின் காதலி நாடகம் ஏனடி
ஆடலில் பாடலில் வல்லவன் நானடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக