ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
—BGM—
ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…
—BGM—
ஆண் : நடை மறந்த கால்கள் தன்னில்…
தடயத்தை பார்க்கிறேன்…
வடம் இழந்த தேரது ஒன்றை…
நாள்தோரும் இழுக்கிறேன்…
ஆண் : சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
சிறகிழந்த பறவை ஒன்றை…
வானத்தில் பார்க்கிறேன்…
உறவுராத பெண்ணை எண்ணி…
நாளெல்லாம் வாழ்கிறேன்…
ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
—BGM—
ஆண் : வெறும் நாரில் கரம் கொண்டு…
பூ மாலை தொடுக்கிறேன்…
வெறும் காற்றில் உளி கொண்டு…
சிலை ஒன்றை வடிக்கிறேன்…
ஆண் : விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விடிந்து விட்ட பொழுதில் கூட…
விண்மீனை பார்க்கிறேன்…
விருப்பமில்லா பெண்ணை எண்ணி…
உலகை நான் வெறுக்கிறேன்…
ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
—BGM—
ஆண் : உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது…
உறவுருவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது…
ஆண் : உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
உயிரிழந்த கருவை கொண்டு…
கவிதை நான் வடிப்பது…
ஒரு தலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது…
ஆண் : இது குழந்தை பாடும் தாலாட்டு…
இது இரவு நேர பூபாளம்…
இது மேற்கில் தோன்றும் உதயம்…
இது நதியில்லாத ஓடம்…
இது நதியில்லாத ஓடம்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக