புதன், 28 மே, 2025

 எப்படி இருந்த பழமொழிகள் இப்படி போச்சே...

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
விளக்கம் :
இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.
கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .
3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.
சரியான பழமொழி :
படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்
4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.
சரியான பழமொழி :
ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -
5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.
சரியான பழமொழி :
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -
( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )
6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.
சரியான பழமொழி :
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

Edit,கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை வடிவினை காண்போம்.சங்க காலத்தில் நம் முன்னோர்கள் படுக்க பாய் மட்டுமே பயன்படுத்தினார்கள்.

அந்த பாய் புல்லுகொண்டு தயாரிக்கப்பட்டதாகும். அந்த புல்லு கற்பூரபுல், கோரைப்புல் என இரு வகைப்படும். கோரைபுல்லுக்கு கழு என்று வேறு ஒருபெயர் உண்டு. கற்பூரபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாயில் கற்பூர வாசனை வரும். கற்பூர பாயின் விலை அதிகம் பெரிய செல்வந்தர்கள் தான் அதனை பயன்படுத்துவார்கள்.

கோரைபுல்லு கொண்டு தயாரிக்கப்படும் பாய் சாதாரணமாக இருக்கும்.இதன் விளையும் குறைவு பாமர மக்கள் பயன்பாட்டிற்கு உதவும். இதனை மனதில் வைத்து வந்த பழமொழிதான் "கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை" கழுஎன்றகோரைபுல்லின் பெயருடன் தைக்க என்ற செயலும் இணைந்து 'கழுதைக்க, கழுதைக்க' என்று சொல்லி சொல்லி அவ்வார்த்தை மருவி 'கழுதைக்கு' என்று ஆகிவிட்டது.

அதன்உண்மையான அர்த்தம் "கழு என்ற கோரைபுல்லு கொண்டு செய்யப்படும் பாயில் எப்படி கற்பூர வாசனை வரும்?" என்பது தான்.அது தான் தற்பொழுது மருவி "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என்று ஆகி விட்டது



‎1 நபர் மற்றும் ‎, ’‎W د எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.‎’ எனச்சொல்லும் வாசகம்‎‎ இன் டூடுலாக இருக்கக்கூடும்
எல்லா உணர்ச்சிகளும்:
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...