வியாழன், 8 மே, 2025

 படம்: மெல்லப் பேசுங்கள்

பாடல்: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
இசைஇளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்கரவர்த்தி & உமா ரமணன்



பெ: கூவின பூங்குயில்.. கூவின கோழி
குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்
யாவரும் அறிவறியாய்.. எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
...

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

: வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்

பெ: தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத் தேரில் ஊர்கோலம் நாளை வந்து

: காதல் மணம் காண்போம்
எண்ணம் போல் இன்பத்தின் வண்ணங்கள்.. ஆஆஆஆ..

பெ: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகிக் கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
...

பெ: அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன் மழை

: கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச் சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி

பெ: நாளை வரும் காலம்
என்றென்றும் எங்களின் கைகளில்

: செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

பெ: ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..
ஆரிராரோ.. ஆராரிராரிராரோ.. ஆரிராரோ.. ஆராரிராரிராரோ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...