பாடல் : நாளை இந்த வேளை......
படம் :உயர்ந்த மனிதன்பாடல் வரிகள்: வாலி
பாடியவர் : P.சுஷீலா
பால் போலவே வான் மீதிலே
யார் காணவே நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று பொய் விடு ஆஆ
தென்றலே என் தனிமை கண்டு நின்று பொய் விடு
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
வண்ண விழியன் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞன் ஆகினான் கலைஞன் ஆகினான்
(நாளை...)
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணமென்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் மயக்கம் கொண்டதேன்
(நாளை...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக