வெள்ளி, 21 நவம்பர், 2025

 

ஏதோ நினைவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாஅகல்விளக்கு

Yetho Ninaivugal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

பெண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

BGM

பெண் : மார்பினில் நானும் மாறாமல் சேரும்…
காலம்தான் வேண்டும்… ம்ம்ம்…
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்…
வாழும் நாள் வேண்டும்… ம்ம்ம்…

பெண் : தேவைகள் எல்லாம் தீராத நேரம்…
தேவன் நீ வேண்டும்… ம்ம்ம்…
சேரும் நாள் வேண்டும்… ம்ம்ம்…

ஆண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…

BGM

ஆண் : நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்…
இன்பம் பேரின்பம்… ம்ம்ம்…
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்…
ஆஹா ஆனந்தம்… ம்ம்ம்…

ஆண் : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்…
ஏங்கும் எந்நாளும்… ம்ம்ம்…
ஏக்கம் உள்ளாடும்… ம்ம்ம்…

பெண் : ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே…
காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…
தினம் காண்பதுதான் ஏதோ…

ஆண் : நினைவுகள்…
பெண் : கனவுகள்…
ஆண் : மனதிலே…
பெண் : மலருதே…

ஆண் & பெண் : காவேரி ஊற்றாகவே…
காற்றோடு காற்றாகவே…


 

கண்ணில் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாபூவிலங்கு

Kannil Edho Minnal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

பெண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

BGM

பெண் : என்ன சொல்லி விளக்கு எனக்கிது புதுசு…
இடைவெளி இல்லாமே துடிக்குது மனசு…

ஆண் : காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
காணாததைக் கண்ட உடம்பு நூலாச்சு…
இரு கண்ணுக்குள்ள தீ விழுந்தது போலாச்சு…
இன்னும் கொஞ்சம் கிட்ட வந்தா என்னாவது…

ஆண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

BGM

ஆண் : நெத்தி வேர்வை நனைச்சு…
பொட்டுக் கொஞ்சம் அழியும்…
குங்குமத்துச் செவப்ப வெட்கம் போல வழியும்…

பெண் : அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
அச்சப்பட்டு ஓடி வந்தேன் வீட்டுக்குள்ளே…
அட அடக் காக்க சேவலும் வந்தது கூட்டுக்குள்ளே…
பெண்மை இங்கே போட்டுக் கொள்ள தாழ்ப்பாள் இல்லே…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…

ஆண் : சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

பெண் : கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
ஆண் : காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…

 

கண்ணுக்குள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ரீட்டாடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Kannukkul Yetho Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…

பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…

ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…

பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…

ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

BGM

ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…

பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…

ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…

பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…

ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

 

கண்மூடி திறக்கும்போது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்தேவி ஸ்ரீ பிரசாத்தேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Kanmoodi Thirakum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே…

ஆண் : தெரு முனையை தாண்டும் வரையில்…
வெறும் நாள்தான் என்று இருந்தேன்…
தேவதையை பார்த்ததும் இன்று…
திருநாள் என்கின்றேன்…

ஆண் : அழகான விபத்தில் இன்று…
ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்…
தப்பிக்க வழிகள் இருந்தும்…
வேண்டாம் என்றேன்…

ஆண் : ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : உன் பேரும் தெரியாது…
உன் ஊரும் தெரியாது…
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா…
நீ என்னை பார்க்காமல்…
நான் உன்னை பார்கின்றேன்…
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா…

ஆண் : உயிருக்குள் இன்னோர் உயிரை…
சுமக்கின்றேன் காதல் இதுவா…
இதயத்தில் மலையின் எடையை…
உணர்கின்றேன் காதல் இதுவா…

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…

BGM

ஆண் : வீதி உலா நீ வந்தால்…
தெருவிளக்கும் கண் அடிக்கும்…
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே…
நதியோடு நீ குளித்தால்…
மீனுக்கும் காய்ச்சல் வரும்…
உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே…

ஆண் : பூகம்பம் வந்தால் கூட… ஓஹோ…
பதறாத நெஞ்சம் எனது… ஓஹோ…
பூ ஒன்று மோதியதாலே… ஓஹோ…
பட் என்று சரிந்தது இன்று… ஓஓ…

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே…

ஆண் : ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…


மேகமே மேகமே பால் நிலா தேயுதே


  • திரைப்படம்: பாலைவனச் சோலை (1981)
  • கீதம்: வாணி ஜெய்ராம்


ஆஆஆஆஆஹாஆஆஆஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேமேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழிதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேஏஏஏமேகமே மேகமே பால் நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோதநிரிச ரிம தநிச தநிபகாதந்தியில்லா வீணை சுரம் தருமோபுயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோபாவையின் ராகம் சோகங்களோஆஆஆஆஆபாவையின் ராகம் சோகங்களோநீரலை போடும் கோலங்களோ
மேகமே மேகமே பால் நிலா தேயுதேதேகமே தேயினும் தேன்மொழி வீசுதேமேகமே மேகமே பால் நிலா தேயுதே
தூரிகை எரிகின்ற போதுஇந்த தாள்களில் ஏதும் எழுதாதுதினம் கனவு எனதுணவுநிலம் புதிது விதை பழுதுஎனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்அது எதற்கோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே

 

காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபாலைவன ரோஜாக்கள்

Kadhal Enbadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…
காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

BGM

ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு…
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு…
புத்தனும் போன பாதைதான்… ஆஆஆ…
பொம்பள என்னும் போதைதான்…

ஆண் : அந்த வேகம் வந்திடும் போது…
ஒரு வேலி என்பது ஏது…
இது நாளும் நாளும் தாகம்தான்…

ஆண் : உண்மைய எண்ணி பாரடா…
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

BGM

ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்…
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்…
ஒண்ணாக கலந்த உறவுதான்… ஆஆஆ…
எந்நாளும் இன்பம் வரவுதான்…

ஆண் : இது காதல் என்கிற கனவு…
தினம் காண எண்ணுற மனசு…
இத சேரத் துடிக்கும் வயசுதான்…

ஆண் : வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்…
இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

 

கண்மணியே காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஆறிலிருந்து அறுபது வரை

Kanmaniyae Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

ஆண் : மேளம் முழங்கிட தோரணம் ஆடிட…
காலமும் வந்ததம்மா…
நேரமும் வந்ததம்மா…

பெண் : பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்…
பாடிடும் எண்ணங்களே…
இந்தப் பாவையின் உள்ளத்திலே…

ஆண் : பூவிதழ் தேன் குலுங்க…
சிந்தும் புன்னகை நான் மயங்க…

பெண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
சாய்ந்திருப்பேன்… வாழ்ந்திருப்பேன்…

ஆண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

பெண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

BGM

பெண் : பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது…
காரணம் நீயறிவாய்…
தேவையை நானறிவேன்…

ஆண் : நாளொரு வேகமும் மோகமும் தாபமும்…
வாலிபம் தந்த சுகம்…
இளம் வயதினில் வந்த சுகம்…

பெண் : தோள்களில் நீயணைக்க…
வண்ணத் தாமரை நான் சிரிக்க…

ஆண் : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்…
தோரணமாய் ஆடிடுவேன்…

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

ஆண் : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…

பெண் : கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…

 

ஆசையிலே பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Aasayilae Paathikatti Song Lyrics in Tamil


பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு…
பாட்டோடு வாழும் என் சாமியே…
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு…
கேட்டாக்கா வாழும் உன் பூமியே…
என் மூச்சு என் பேச்சு நீதானயா…
என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா…

பெண் : ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : வைகையிலே வந்த வெள்ளம்…
நெஞ்சிலே வந்ததென்ன…
வஞ்சி நான் கேட்ட வரம்…
வந்து நீ தந்ததென்ன…

பெண் : சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து…
சிந்துதான் பாடுது…

பெண் : பொன்னுமணித் தேரு…
நான் பூட்டி வச்சேன் பாரு…
கன்னி என்னைத் தேடி…
நீ அங்க வந்து சேரு…

பெண் : விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு…
நீ வாயேன் வழி பாத்து…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல…
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல…

பெண் : கன்னி நான் நாத்து…
கண்ணன் நீ காத்து…
வந்துதான் கூடவில்ல…

பெண் : கூறைப் பட்டு சேலை…
நீ வாங்கி வரும் வேளை…
போடு ஒரு மாலை…
நீ சொல்லு அந்த நாளை…

பெண் : ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்…
என்னை ஏந்த நீதானே…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…


 

சோலைப் புஷ்பங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலா & கங்கை அமரன்இளையராஜாஇங்கேயும் ஒரு கங்கை

Solai Pushpangale Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…
சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

பெண் : கண்ணாளனைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

BGM

பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா…

ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா…
கங்கை வற்றி விடுமா…

பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…
உன்னை எண்ணி மூச்சிருக்குது…
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது…

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு…
கொக்கு ஒண்ணு காத்திருக்குது…
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
என் வேதனை சொன்னாலென்ன…
நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

ஆண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

BGM

பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா…
சொந்தம் மாறி விடுமா…
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா…
தன்னை விற்று விடுமா…

ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே…
நீர் வடிய நான் பொறுக்கல்லே…

பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்…
கல்யாணமாம் சாமி…

ஆண் : காவலுக்கு நாதி இல்லையா…
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன…
பெண் : என் வேதனை சொன்னாலென்ன…
ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன…

பெண் : சோலைப் புஷ்பங்களே…
என் சோகம் சொல்லுங்களேன்…

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...