திங்கள், 17 நவம்பர், 2025

 ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,


படம்: தில்லுமுல்லு

பாடியவர்: எஸ்.பி.பி.
வரிகள்:கண்ணதாசன்.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது(2)
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அரிவாய் அம்மா..

இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினாள்(2)
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்,
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா..

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...