திங்கள், 10 நவம்பர், 2025

 

சிங்காரி சரக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாக்கிசட்டை (1985)

Singari Saraku Song Lyrics in Tamil


ஆண் : வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி…
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு…
பாத்தாலே தண்ணி வரும்… இஷ் அப்பா…
பாக்குறவன் நாக்குலதான்…
பாலாட்டும் அய்யோ தேனாட்டம்…
அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்…

BGM

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

BGM

ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்…
ம்ம்ம்… ஆஹா ஆஆ ஆஆ… ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : சாராயம் குடிச்சாக்கா…
அட சங்கீதம் தேனா வரும்…
சங்கீதம் தேனா வந்தா…
கூட இங்கிதம் தானா வரும்…

ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை…
குட்டை குளத்துலே கத்தி பழகலே…

ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ…
வாத்தியாரா ஒத்துக்கோ…
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ…

ஆண் : உச்சந்தலை கீழுருக்க…
உள்ளங்கால் மேலிருக்க…
நிக்கட்டுமா நடக்கட்டுமா… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

BGM

ஆண் : முன்னாடி இருக்குதடா…
நம்ம மூக்காயி இட்லி கடை…
பின்னாலே ருசிக்குமடா…
இவ சூடான கீரவடை…

ஆண் : இது மணக்குது…
என்னை மயக்குது…
பசி எடுக்குது…
பக்கம் இழுக்குது…

ஆண் : புத்தம் புது ஆப்பமா…
தொட்டு கொஞ்சம் பாப்போமா…
தின்னுபுட்டு மொத்தமா…
துட்டு என்ன கேப்போமா…

ஆண் : சுட்ட கருவாடிருக்கு…
வாத்துமுட்டை வறுத்திருக்கு…
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…
நம்ம சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...