திங்கள், 10 நவம்பர், 2025

ராத்திரியில் பூத்திருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதங்கமகன் (1983)

Raathiriyil Poothirukum Song Lyrics in Tamil

BGM

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

BGM

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்…
ஆண் : கை விரலில் ஒரு வேகம்…
கண்ணசைவில் ஒரு பாவம்…

பெண் : வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்…

ஆண் : ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் ஓடும்…
மோதும் புதிய அனுபவம்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

BGM

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே…
பெண் : மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற…

ஆண் : வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே…

பெண் : நாதசுரம் ஊதும் வரை…
நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்…

பெண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

ஆண் : சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
சேலைச் சோலையே…
பருவ சுகம் தேடும் மாலையே…
பகலும் உறங்கிடும்…

ஆண் : ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ…
பெண் : ராஜசுகம் தேடி வரத் தூது விடும் கண்ணோ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...