வெள்ளி, 21 நவம்பர், 2025

 

மலரே என்னென்ன கோலம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஆட்டோராஜா

Malare Enna Kolam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா… மலரே நலமா…

BGM

ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
வசந்தம் உன்னோடு சொந்தம்…
உனக்கேன் என்னோடு பந்தம்…
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில்…
இங்கு பூவேது காயேது…

BGM

ஆண் : நினைத்தால் எட்டாத தூரம்…
எனக்கேன் உன் மீது மோகம்…
திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே…
நீ எங்கே நான் எங்கே…
நீ எங்கே நான் எங்கே…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…

BGM

ஆண் : நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
நிலவை வானத்தில் பார்த்து…
அருகே வாவென்று கேட்டு…
அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம்…
என்னோடு நான் கண்டேன்…

ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு…
உலகில் இப்போதும் உண்டு…
சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…

ஆண் : சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால்…
வழி ஏது முடியாது…
வழி ஏது முடியாது…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…

ஆண் : மலரே என்னென்ன கோலம்…
மலரே நலமா மலரே நலமா…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...