வெள்ளி, 21 நவம்பர், 2025

 

ஆசையிலே பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்பி. சுசீலாஇளையராஜாஎங்க ஊரு காவல்காரன்

Aasayilae Paathikatti Song Lyrics in Tamil


பெண் : தென்பாண்டிச் சீமை தெம்மாங்கு பாட்டு…
பாட்டோடு வாழும் என் சாமியே…
உன் பேர போட்டு நான் பாடும் பாட்டு…
கேட்டாக்கா வாழும் உன் பூமியே…
என் மூச்சு என் பேச்சு நீதானயா…
என் வாக்கு நீ கேட்டு காப்பத்தையா…

பெண் : ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : வைகையிலே வந்த வெள்ளம்…
நெஞ்சிலே வந்ததென்ன…
வஞ்சி நான் கேட்ட வரம்…
வந்து நீ தந்ததென்ன…

பெண் : சின்ன பூ பாத்து சேர்ந்ததே காத்து…
சிந்துதான் பாடுது…

பெண் : பொன்னுமணித் தேரு…
நான் பூட்டி வச்சேன் பாரு…
கன்னி என்னைத் தேடி…
நீ அங்க வந்து சேரு…

பெண் : விதை போட்டேன் அது விளைஞ்சாச்சு…
நீ வாயேன் வழி பாத்து…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…

பெண் : ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

BGM

பெண் : கண்ணுதான் தூங்கவில்ல…
காரணம் தோணவில்ல…
பொண்ணு நான் ஜாதி முல்ல…
பூமாலை ஆகவில்ல…

பெண் : கன்னி நான் நாத்து…
கண்ணன் நீ காத்து…
வந்துதான் கூடவில்ல…

பெண் : கூறைப் பட்டு சேலை…
நீ வாங்கி வரும் வேளை…
போடு ஒரு மாலை…
நீ சொல்லு அந்த நாளை…

பெண் : ஏஞ்சாமி நான் காத்திருக்கேன்…
என்னை ஏந்த நீதானே…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

பெண் : நானா பாடலயே நீதான் பாட வச்ச…
நானா பாடலயே நீதான் பாட வச்ச…

பெண் : ஆசையிலே பாத்தி கட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...