தென்னமர தோப்புக்குள்ளே
| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| காளிதாசன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | தேவா | தெற்கு தெரு மச்சான் |
Thennamara Thopukule Song Lyrics in Tamil
—BGM—
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
—BGM—
ஆண் : ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல…
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல…
ஆத்தோரம் காத்து பட்டு பறக்குதடி சேல…
ஆத்தாடி உன் அழகு தேன் தூவும் சோல…
பெண் : புது முகமாக.. அறிமுகம் ஆனேன்…
அறிமுக நாளே உன் அடைக்கலமானேன்…
இனி பூஞ்சோல குயிலபோல நான் பாடுவேன்…
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
—BGM—
பெண் : மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்…
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்…
மாமா உன் பேரச் சொன்னா மரிக்கொழுந்து வாசம்…
ஆளான பொண்ணுக்கெல்லாம் காதோரம் கூசும்…
ஆண் : கனிமரம் போல அடி குலுங்கிடும் மானே…
கனவினில் நானே தினம் உனை ரசித்தேனே…
அடி பூவே உன் பூஜைக்காக நான் ஏங்கினேன்…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
ஆண் : தென்னமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே…
என்னைத் தேடிவந்து சேதி சொன்ன குயிலே குயிலே…
பெண் : தென்னமர தோப்புக்குள்ளே…
ஆண் : குயிலே குயிலே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக