ஞாயிறு, 9 நவம்பர், 2025

உச்சி வகுந்தெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். பி. சைலஜாஇளையராஜாரோசாப்பூ ரவிக்கைக்காரி

Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil

BGM

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

பெண் : யே… ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…
ஆரிராரோ… ஆரிராரோ…

BGM

ஆண் : பாட்டுல மாடுகட்டி பால கறந்து வச்சா…
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க…
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல…
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ…
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க…
கட்டுக்கதை அத்தனையும் கட்டுக்கதை…
அத சத்தியமா நம்ப மனம் ஒத்துகல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…

BGM

ஆண் : பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு…
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க…
செங்கரையான் தின்னிருக்க நியாமில்ல…
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

ஆண் : உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...