திங்கள், 10 நவம்பர், 2025

 

நம்ம ஊரு சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Namma Ooru Singari Song Lyrics in Tamil


ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

BGM

ஆண் : ஹாஹா… நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹாஹாஹா ஹாங்…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ஹேஹே ஏஏஹே…

BGM

ஆண் : பாலாடை போலாடும் பாப்பா…
எப்போதும் நான் சொன்னா கேப்பா…
ராஜாவை பாக்காமல் ரோஜா…
ஏமாந்து போனாளே லேசா…

ஆண் : நான் நாளு வச்சு தேதி வச்சு…
ஊரு விட்டு ஊரு வந்து…
நீயின்றி போவேனோ சம்போ…

ஆண் : நான் மூணு மெத்தை வீடு கட்டி…
மாடி மேல ஒன்ன வச்சு…
பாக்காமல் போவேனோ சம்போ…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பபபபப பபபப…

BGM

ஆண் : அன்பான உன் பேச்சு ராகம்…
நடை போட்டு நீ வந்தா தாளம்…
சுகமான உன் மேனி பாடல்…
இதிலென்ன இனிமேலும் ஊடல்…

ஆண் : அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்…
தேவனுக்கு நானும் சொந்தம்…
பூலோகம் தாங்காது வாம்மா…

ஆண் : இந்த காதலுக்கு ஈடு சொல்ல…
காவியத்தில் யாருமில்லை…
நானொன்று நீயொன்றுதாம்மா…

ஆண் : மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா…
மன்மதன் வந்தானா நல்ல சங்கதி சொன்னானா…

ஆண் : நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…
ராப்பா பாப்பா பாப்பா…

BGM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  ஏதோ நினைவுகள் பாடலாசிரியர் பாடகர்(கள் ) இசையமைப்பாளர் திரைப்படம் கங்கை அமரன் கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.பி. சைலஜா இளையராஜா அகல்விளக்கு Yeth...