புதன், 2 ஜூலை, 2025

 

குழலூதும் கண்ணனுக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : என் மேனி தேனெறும்பு…
என் பாட்டு பூங்கரும்பு…
மச்சான் நான் மெட்டெடுப்பேன்…
உன்னதான் கட்டி வைப்பேன்…

பெண் : சுகமான தாளம் தட்டி பாடட்டுமா…
உனக்காச்சு எனக்காச்சு…
சரி ஜோடி நாமாச்சு… கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : வந்தாச்சு சித்திரைதான்…
போயாச்சு நித்திரைதான்…
பூவான பொண்ணுக்குத்தான்…
ராவானா தேடுதுதான்…

பெண் : மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா…
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம்…
படும் பாடு கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி
போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

 

தேடும் கண் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Thedum Kann Paarvai Song Lyrics in Tamil


ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு…
வரும் பாதை பார்த்திரு…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

BGM

ஆண் : காண வேண்டும் சீக்கிரம்…
என் காதல் ஓவியம்…
வாராமலே என்னாவதோ…
என் ஆசை காவியம்…

பெண் : வாழும் காலம் ஆயிரம்…
நம் சொந்தம் அல்லவா…
கண்ணாளனே நல்வாழ்த்துகள்…
என் பாட்டில் சொல்லவா…

ஆண் : கனிவாய் மலரே…
உயிர் வாடும்போது ஊடலென்ன…
பாவம் அல்லவா…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

BGM

ஆண் : தேடி தேடி பார்க்கிறேன்…
என் கால்கள் ஓய்ந்ததே…
காணாமலே இவ்வேளையில்…
என் ஆவல் தீருமோ…

பெண் : காற்றில் ஆடும் தீபமோ…
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே…
என் மேனி வண்ணமே…

ஆண் : பிரிந்தோம்… இணைவோம்…

பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும்…
வாசல் தேடி வா…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ…

பெண் : வெறும் மாயமாகுமோ…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க…

பெண் : துடிக்க…


 

அழகு மலர் ஆட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & டி.எஸ்.ராகவேந்திராஇளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Azhagu Malar Ada Song Lyrics in Tamil


ஆண் : சா… ஸா…
மக மக சா மக மக சா சா…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஆகாயம் இல்லாமலே…
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது…
ஆதாரம் இல்லாமலே…
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது…

பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று…
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது…
விடியாத இரவேதும் கிடையாது என்று…
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது…

பெண் : வசந்தம் இனி வருமா…
வாழ்வினிமை பெருமா…
ஒரு பொழுது மயக்கம்…
ஒரு பொழுது கலக்கம்…
பதில் ஏதும் இல்லாத கேள்வி…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

பெண் : ஊதாத புல்லாங்குழல்…
எனதழகு சூடாத பூவின் மடல்…
தேய்கின்ற மஞ்சள் நிலா…
ஒரு துணையை தேடாத வெள்ளை புற…

பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்…
பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது…
நீரூற்று பாயாத நிலம்போல நாலும்…
என் மேனி தரிசாக கிடக்கின்றது…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…

பெண் : தனிமையிலும் தனிமை…
கொடுமையிலும் கொடுமை…
இனிமை இல்லை வாழ்வில்…
எதற்கு இந்த இளமை…
வேறென்ன நான் செய்த பாவம்…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

பெண் : விரல் கொண்டு மீட்டாமல்…
வாழ்கின்ற வீணை…
குளிர் வாடை கொஞ்சமல்…
கொதிக்கின்ற சோலை…
பகலிரவு பல கனவு…
இரு விழியில் வரும்பொழுது…

பெண் : அழகு மலராட…
அபிநயங்கள் கூட…
சிலம்பொலியும் புலம்புவதை கேள்…

BGM

 

காத்திருந்து காத்திருந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Kaathirunthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

பெண் : ஆஆ… ஆரிரோ… ஆரிரோ…
ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…

பெண் : தங்க சலங்க கொண்டு தாய்மாமன் வருவாரு…
பொண்ணு மணியும் கொண்டு பொன்கூட தருவாரு…
பொழுதோட தூங்கு கண்ணே… ஆரி ஆரிரோ…
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்… ஆரி ஆரிரோ…

BGM

ஆண் : ஆஆ… ஹா… ஆஆ…ஹா..ஆஆ…
முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே…
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே…
வச்சதிப்போ காணாம நானே தேடுறேன்…
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்…

ஆண் : நான் படிக்கும் மோகனமே…
நான் படைச்ச சீதனமே…
தேன் வடிச்ச பாத்திரமே…
தென்மதுர பூச்சரமே…
கண்டது என்னாச்சு…
கண்ணீரில் நின்னாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

BGM

ஆண் : நீரு நிலம் நாலு பக்கம்…
நான் திரும்பி பாத்தாலும்…
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்…
அத்தனையும் நீயாகும்…

ஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற…
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற…

ஆண் : ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச…
யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச…
உள்ளமும் புண்ணாச்சு…
காரணம் பெண்ணாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…


 

ராசாத்தி உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Rasathi Unna Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

ஆண் : பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : தத்தித் தவழும் தங்கச் சிமிழே…
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே…
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்…
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு…
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு…
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : அத்தை மகளோ… மாமன் மகளோ…
சொந்தம் எதுவோ… பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
காத்தாடி போலாடுது…

 

உன் பார்வையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Un Paarvaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான்…
ஆண் : இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான்…

பெண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான்…
ஆண் : கழுத்தில் இருப்பது வலம்புரிதான்…

ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…
பெண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்…

ஆண் : மனதை மயிலிடம் இழந்தேனே…
பெண் : மயங்கி தினம் தினம் விழுந்தேனே…

ஆண் : மறந்து…
பெண் : இருந்து…
ஆண் : பறந்து தினம் மகிழ…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…

BGM

பெண் : அணைத்து நனைந்தது தலையணைதான்…
அடுத்த அடியென்ன எடுப்பது நான்…
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்…
இடுப்பை வளைத்தேனை அணைத்திடத்தான்…

பெண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்…
மறைத்த முகத்திரை திறப்பாயோ…
திறந்து அகசிறை இருப்பாயோ…
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…
நிதமும் உன்னை நினைக்கிறேன்…
நினைவினாலே அணைக்கிறேன்…

பெண் : உன் பார்வையில் ஓராயிரம்…
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே…


 

அடி ஆத்தாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாகடலோரக் கவிதைகள்

Adi Aathadi Song Lyrics in Tamil


பெண் : அடி ஆத்தாடி…

—BGM—

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி அம்மாடி…

BGM

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்…
கட்டுப்பட்டு ஆடாதோ…
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்…
மெட்டுக்கட்டிப் பாடாதோ…

ஆண் : இப்படி நான் ஆனதில்லை…
புத்தி மாறிப் போனதில்லை…
முன்னே பின்னே நேர்ந்ததில்லை…
மூக்கு நுனி வேர்த்ததில்லை…

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள…
கத்திச் சண்டை கண்டாயோ…
படபடக்கும் நெஞ்சுக்குள்ள…
பட்டாம்பூச்சி பார்த்தாயோ…
இசை கேட்டாயோ… ஓஓஓ…

BGM

பெண் : லலலலலா… லலலலல…
லலலல லலா… லலல லா லலல லா…
லலலலல… லலலலல… லலலல லா…

BGM

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள…
ஏகப்பட்ட சந்தோசம்…
உண்மை சொல்லு பெண்ணே என்னை…
என்ன செய்ய உத்தேசம்…

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்…
வந்து வந்து போவதென்ன…
கட்டுமரம் பூப்பூக்க…
ஆசைப்பட்டு ஆவதென்ன…

ஆண் : கட்டுத்தறி காளை நானே…
கன்னுக்குட்டி ஆனேனே…
தொட்டுத் தொட்டு தென்றல் பேச…
தூக்கம் கெட்டுப் போனேனே…
சொல் பொன்மானே… ஏஏஏ…

பெண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
பெண் : அடி அம்மாடி…
குழு : ஒரு அலை வந்து மனசில அடிக்குது அதுதானா…

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்…
ஆண் : ஒருகோடி ஆனந்தம்…
பெண் : இவன் மேகம் ஆக யாரோ காரணம்…
ஆண் : ஆஆஆ…

ஆண் : அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப் பறக்குது சரிதானா…
ஆண் : அடி ஆத்தாடி…


 

மௌனமான நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசலங்கை ஒலி

Mounamaana Neram Song Lyrics in Tamil


BGM

பெண் : மௌனமான நேரம்…

பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
ஏன் என்று கேளுங்கள்…

பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…

BGM

ஆண் : இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ…

BGM

ஆண் : புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ…

பெண் : குளிக்கும் ஓர் கிளி…
கொதிக்கும் நீர்த் துளி…
குளிக்கும் ஓர் கிளி…
கொதிக்கும் நீர்த் துளி…

ஆண் : ஊடலான மார்கழி நீளமான ராத்திரி…
பெண் : நீ வந்து ஆதரி…

பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…

BGM

பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ…

BGM

பெண் : கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ…

ஆண் : பாதை தேடியே பாதம் போகுமோ…
பாதை தேடியே பாதம் போகுமோ…

பெண் : ஆடலான நேசமோ…
கனவு கண்டு கூசுமோ…

ஆண் : தனிமையோடு பேசுமோ…

ஆண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
ஏன் என்று கேளுங்கள்…

பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…

 

ரோஜா ஒன்று முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகொம்பேறி மூக்கன்

Roja Ondru Mutham Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

பெண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

BGM

ஆண் : தங்க மேனி தழுவும்…
பட்டுச்சேலை நழுவும்…

பெண் : தென்றல் வந்து விளக்கும்…
அது உங்களோடு பழக்கம்…

ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி…
வாசல் வந்தேன் மூடாதே…

பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால்…
சொர்க்கம் உண்டு வாடாதே…

ஆண் : அல்லிப்பூவின் மகளே…
கன்னித்தேனை தா… ஹோ…

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

ஆண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

BGM

பெண் : வெண்ணிலாவில் விருந்து…
அங்கு போவோம் பறந்து…

ஆண் : விண்ணின் மீனை தொடுத்து…
சேலையாக உடுத்து…

பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று…
பூக்கள் எல்லாம் பாய் போட…

ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம்…
ஜன்னல் சாத்தி வாயூற…

பெண் : கன்னிக்கோயில் திறந்து…
பூஜை செய்ய வா… ஹோய்…

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

பெண் : மயக்கத்தில் தோய்ந்து…
மடியின் மீது சாய்ந்து…

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்…

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...